Product Description
ஜென். ஜென்
ஜென். ஜென்
Language - தமிழ்
Couldn't load pickup availability
Share
In stock
வாழ்வில் சற்று நிதானித்து உங்களுடைய தினசரிப் பழக்கங்களையும் கண்ணோட்டங்களையும் மாற்றுவதன் மூலம் மகிழ்ச்சியைக் கண்டு கொள்ளுங்கள் புகழ்பெற்ற ஜென் புத்த மதத் துறவியான ஷுன்மியோ மசுனோ, பல நூற்றாண்டுகால ஜென்மங்களை ஆய்வு செய்து, ஒரு நாளைக்கு ஒரு பாடம் என்ற வகையில், தெளிவான, நடைமுறைக்கு உகந்த, அன்றாட வாழ்வில் செயல்படுத்தக்கூடிய 100 பாடங்களாகத் தொகுத்து வழங்கியுள்ளார்.
உண்மையான மகிழ்ச்சியையும் மன அமைதியையும் கைவசப்படுத்த எளிய வழிகளை நீங்கள் இந்நூலில் கற்றுக் கொள்வீர்கள். எதிர்மறையான உணர்ச்சிகளைக் களைவதற்கு மூச்சை ஆழமாக வெளியே விடுவது எப்படி, உங்களுடைய சிந்தனையைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு உங்கள் வீடு எளிமையாக இருக்கும்படி அதை ஒழுங்கமைப்பது எப்படி, உங்கள் மனதை ஒழுங்காகக் கொண்டு வருவதற்காக முதல் நாள் இரவிலேயே உங்கள் காலணிகளை வரிசையாக அடுக்கி வைப்பது எப்படி, ஒரு ஒற்றை மலரை நட்டு வைத்து அதை வளர்ப்பது எப்படி, உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதவற்றைப் பராமரிப்பது எப்படி பற்றிக் கவலைப்படாமல் இருப்பது எப்படி என்பதையும் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.
