Product Description
விதியை வடிவமைத்தல் | VITHIYAI VADIVAMAITHAL
விதியை வடிவமைத்தல் | VITHIYAI VADIVAMAITHAL
Language - தமிழ்
Couldn't load pickup availability
Share
In stock
விதியை வடிவமைத்தல் -
நம் வாழ்க்கை முறையில் விதி என்பதன் பொருள் என்ன? எது நிலையானது? எது மாறக் கூடியது? நம் விதியை நாம் எவ்வாறு வடிவமைப்பது? இந்தக் கேள்விகள், உலகின் தலைசிறந்த தத்துவ மேதைகள் சிலரால் தொன்றுதொட்டு கேட்கப்படுகின்றன. புதிய அடித்தளத்தை அமைக்கும் இப்புத்தகத்தில், தாஜி அவர்கள் போன்ற கேள்விகளுக்கு எளிமையான தீர்வுகளையும், நடைமுறைக்கு உகந்த விவேகத்தையும் கொண்டு பதிலளிக்கிறார். 'த ஹார்ட்ஃபுல்னெஸ் வே' என்ற அவரது புத்தகத்தையடுத்து, நம் வாழ்க்கை முறையை பண்படுத்திக் கொள்வது, மறுமை எனப்படும் பிற்கால வாழ்வின் விதி உட்பட, நமது விதியை வடிவமைக்கவும் ஹார்ட்ஃபுல்னெஸ் பயிற்சிகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என நம்மை வழிநடத்தி, இப்பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு நம்மை இட்டுச்செல்கிறார். உணர்வுறுநிலையை பற்றியும், பரிணாம வளர்ச்சியின் பங்கையும் விவரிக்கும் அவர், பிறப்பு இறப்பு ஏற்படும் நேரத்தில் என்ன நிகழ்கிறது என்றும் - மேலும் வாழ்க்கையே மாற்றப்படும் மிக முக்கியமான தருணங்களில் நாம் எவ்வாறு செயல்படலாம் என்பதை விளக்குகிறது.
நாம் நம்மீதே நம்பிக்கை கொள்ள வேண்டும், எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு அதிலிருந்து வெளிவருவதற்கான வழியைக் கண்டறியவும், மிகக் கடினமான சூழ்நிலையைக்கூட வாய்ப்பாகக் காண்பதற்கும் தாஜி அவர்கள் நமக்குத் தூண்டுதலளிக்கிறார். சில எளிமையான பயிற்சிமுறைகள், இதயம் நிறைந்த ஆர்வம் மற்றும் விரிவடைந்த உணர்வுறுநிலை, இவற்றின் மூலமாக நாம் அனைவரும் நமது உள்ளார்ந்த ஆற்றலையும், இப்பிறவியில் அடைய வேண்டிய இலக்கையும் கண்டறிய முடியும் என வலியுறுத்துகிறார்.
