Product Description
வாழ்வு இட்டுச்சென்ற திசை | VAAZHVU ITTUCHENDRA THISAI
வாழ்வு இட்டுச்சென்ற திசை | VAAZHVU ITTUCHENDRA THISAI
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
Low stock
வாழ்வின் தொடர் ஓட்டத்தில் முதுமை மட்டுந்தான் மனிதனின், தான் வாழ்ந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது. இந்நினைவுகளின் மூலம் ரிச்சர்ட் பாஸ்கரன் இதுவரை கடந்த தன் வாழ்வை யாருமற்ற இந்நாட்களில் திரும்பிப்பார்க்கிறார். அதுவே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது.
அவரோடு பயணித்த பலபேர் எந்த சுவடுகளுமற்று மறைந்துபோனார்கள். சொந்தக் குடும்பத்தவர்களின் நினைவுகள் தவிர மற்ற எல்லோர் மனதிலிருந்தும் ஏதோ ஒரு வகையில் அவர்களின் நினைவுகள் துடைக்கப் பட்டுவிட்டன.
ஆனால் இப்புத்தகத்தின் மூலம் ரிச்சர்ட் பாஸ்கரன் குடும்பம், திருச்சபை வரலாறு, சமூகம் பற்றிய பதிவுகளை தன் அடுத்தத் தலைமுறைக்கும் கடத்த நினைக்கிறார். இது படைப்பு மனம் கொண்ட ஒருவருக்கே சாத்தியமாகிறது.
அவர் வாசித்த இலக்கியங்கள் இத்தனை காலத்துக்கு அப்புறமும் மனதில் உறைந்து கிடந்திருக்கிறது என்பதே இந்த எளிய எழுத்தின் வல்லமை.
ஏதோ ஒரு வகையில் மனிதர்கள் எல்லோருமே தன் மேன்மைகளை மட்டுமே மனதால் சேகரிக்கத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். தன் மனதில் எழுந்த துரோகம், காமம், கீழ்மை என எல்லாவற்றையும் மண்ணின் அடியாழத்தில் புதைத்துவிட வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.
காலத்தின் ஏதோ ஒருத் தருணத்தில் ஒரு பெருமழை அல்லது பெருவெள்ளம் இவைகளை மேலுயர்த்திக் கொண்டு வந்துவிடுகிறது. அதற்கு கனிதல்
அவசியம்.
ரிச்சர்ட் பாஸ்கரன் இப்பிரதியில் இளகி கனிந்திருக்கிறார்.
