Skip to product information
1 of 1

Product Description

வ. உ. சி. : வாராது வந்த மாமணி | V.O.C VARATHU VANTHA MAMANI

வ. உ. சி. : வாராது வந்த மாமணி | V.O.C VARATHU VANTHA MAMANI

Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 290.00
Regular price Sale price Rs. 290.00
Sale Sold out

Low stock

- கப்பலோட்டியும் செக்கிழுத்தும் தமிழரின் மனங்களில் தியாகத்தின் திருவுருவாக நீங்காத இடம்பெற்றவர் வ.உ.சி. சுதேசி இயக்கத்தில் ஈடுபட்டு, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பல் கம்பெனி நடத்தி, 1908இல் கைதாகிக் கடுந்தண்டனைப் பெற்ற வ.உ.சி., 1912இல் விடுதலையான பிறகு 24 ஆண்டுகள் வாழ்ந்தார். வறுமையில் துன்புற்ற நிலையிலும் அவர் ஓய்ந்துவிடவில்லை. விடுதலைப் போராட்டத்தோடு தொழிலாளர் இயக்கம், பிராமணரல்லாதார் இயக்கம், சமயச் சீர்திருத்தம், தமிழ் மறுமலர்ச்சி என்று பல துறைகளிலும் பங்குகொண்டார். ஆனால் வ.உ.சி.யின் தொண்டுக்கும் தியாகத்துக்கும் உரிய அறிந்தேற்பு கிடைக்கவில்லை என்பது தமிழ்ச் சமூகத்தின் ஒருமித்த கருத்து.

வ.உ.சி. அவரைப் பற்றி அவர் காலத்தில் வந்த பதிவுகள் ஆவணப்படுத்தப்பட்டு, அவருக்கு இழைக்கப்பட்ட நீதிக்கு நியாயம் வேண்டும் என்ற முயற்சி இந்த நூல் அமைகிறது. வ.உ.சி.யின் புகழ் ஓங்கியிருந்த காலத்தில் வெளிவந்த அவருடைய வாழ்க்கை வரலாறுகளையும், அவர் மறைந்தபொழுது வெளியான இரங்கலுரைகளையும் பிற ஆவணங்களையும் கொண்டதாக இத்தொகுப்பு அமைகின்றது.

View full details