Product Description
தெரிந்த ரகசியங்கள் | THERINTHA RAGASIYANGAL
தெரிந்த ரகசியங்கள் | THERINTHA RAGASIYANGAL
Language - தமிழ்
Couldn't load pickup availability
Share
In stock
தெரிந்த ராகசியங்கள் -
'தெரிந்த ரகசியங்கள்' நூலைப் படிப்பது, நம்பிக்கை, அபரிமிதம் மற்றும் சாத்தியக்கூறுகள் தொடர்பான புதிய பல பாதைகளைத் திறந்துவிடும். இந்நூலின் ஆசிரியரான மஹாத்ராயா, தன்னுடைய வாசகர்களுடனான வாழ்நாட்கால ஆய்வில் இருந்து கிடைத்த ஞானத்தை, ஒரு கதையின் வடிவில் பகிர்ந்து கொள்கிறார். எளிதில் நடைமுறைப்படுத்தத்தக்க வாழ்க்கை உத்திகள் ஊடாக அவர் வெற்றி மற்றும் மகிழ்ச்சிக்கான பாதைக்கு நமக்கு வழி காட்டுகிறார். அதோடு, நமது வாழ்க்கையில் இடம் பெற்றுள்ள சிறிய மற்றும் பெரிய விஷயங்களின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளவும் நமக்கு உதவுகிறது. வாழ்க்கையின் முப்பரிமாணங்களாக விளங்குகின்ற தனிப்பட்ட ரீதியிலும், தொழில்முறைரீதியிலும் உளரீதியிலும் வளர விரும்புகின்ற எவரொருவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு நூல் இது.
அதனுடைய எளிய நடைக்காகவும், நம்மோடு பொருத்திப் பார்த்துக் கொள்ள வசதியாக இருக்கின்ற எடுத்துக்காட்டுகளுக்காகவும் இந்நூல் பெருநிறுவன உலகத் தலைவர்களின் எண்ணற்ற பாராட்டுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். தனிநபர் வளர்ச்சிக்கும்,ஒரு நிறுவனத்தில் தலைமைத்துவ வளர்ச்சிக்கும் வழிகாட்டுகின்ற ஒரு கச்சிதமான பரிசுதான் 'தெரிந்த ரகசியங்கள்'.
தன்னையும் அதன் மூலம் இந்த உலகையும் தூக்கி நிறுத்தப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற அனைத்து ஆத்மாக்களுக்கும் இந்நூல் காணிக்கையாக்கப்படுகிறது.
எல்லோரும் நடக்கின்ற பாதையில்
நீங்கள் நடந்தால் எல்லோரும்
அடைகின்ற இடத்தைத்தான் அடைவீர்கள்.
வேறு எவரும் அடைந்திராத இடம்
நீங்கள் அடைய வேண்டுமென்றால்
வேறு எவரும் செய்திராத காரியங்களைச்
செய்திடத் துணிய வேண்டும்.
வெற்றி கிட்ட வேண்டுமென்றால்
வித்தியாசமாக இருக்க வேண்டும்.
வித்தியாசமானவர்கள்தான்
புதிய பாதைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
அபரிமிதம் உங்களது பிறப்புரிமை.
அதைப் பெற நீங்கள் தகுதியானவர்தாம்.
அதற்கு ஒரு வழி இருக்கிறது.
மஹாத்ரயா
'தெரிந்த ரகசியங்கள்' என்ற நூலைப் படிப்பதன் மூலம் நீங்கள் உங்கள் வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியங்களையும் உங்களை நோக்கிக் கவர்ந்திழுப்பீர்கள்!
