Skip to product information
1 of 1

Product Description

தகிப்பின் வாழ்வு | THAKIPPIN VAAZHVU

தகிப்பின் வாழ்வு | THAKIPPIN VAAZHVU

Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 120.00
Regular price Sale price Rs. 120.00
Sale Sold out

Low stock

THAKIPPIN VAAZHVU - அகதிகளின் வெளியேற்றம், நவீன அடிமைமுறை, ஆட்சி மாற்றம், வீடுகள், மதங்கள், சாதிகள், முகாம்கள், பலிகள், ஆயுத உற்பத்தி, புலம்பெயர் சமூகங்களுக்கிடையே நிலவும் தராதரம், சட்டமும் நடைமுறைச் சிக்கல்களும் என சமகால அகதி அரசியல் குறித்த பதின்மூன்று கட்டுரைகளும் முகாம்வாழ் பெண்ணின் ஒரு வாக்குமூலமும் மூத்த புலி உறுப்பினர் ஒருவரின் நேர்காணலும் கொண்டது. இத்தொகுப்பு. உலகளவில் போர்களைக் குறித்து உள்ளும் புறமுமான ஆய்வுகளும் சாட்சியப் பதிவுகளும் வாக்குமூலங்களும் வெளியாகியுள்ளன. அதன் தொடர்ச்சியாக இந்துமாக் கடற்கரைகளில் தனித்து விடப்பட்ட மக்களைக் குறித்து அவர்களின் துயர் குறித்தும், கால்நூற்றாண்டு காலம் விளிம்புநிலைக்கு உட்படுத்தப்பட்டுக் கவனிப்பாரற்று பத்துப்பத்து கொட்டாய்களில் அடைக்கப்பட்ட வாழ்வு குறித்தும் தொடர்ந்து பேசிய வருபவர் பத்திநாதன் விளிம்புநிலை வாழ்வு குறித்த வாசிப்பின் தேவையை வேண்டி நிற்கும் காலத்தில் இவ்வெழுத்துக்கள் வெளியாகின்றன. இது இவரது நான்காவது தொகுப்பு.
View full details