Product Description
தமிழா? சம்ஸ்கிருதமா? | TAMIZHA ? SAMASKIRTHAMA ?
தமிழா? சம்ஸ்கிருதமா? | TAMIZHA ? SAMASKIRTHAMA ?
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
In stock
"அறியப்படாத தமிழ்மொழி" எனும் மிகச்சிறந்த நூலை இயற்றிய முனைவர் கண்ணபிரானின் இன்னொரு மகத்தான படைப்பு தான் தமிழா? சமஸ்கிருதமா? எனும் இந்நூல். வருகிற பிப்ரவரி 01 முதல் இந்நூல் உங்கள் கைகளில் தவழும்...
ஒருவர், ஒரே ஒரு கேள்வி கேட்கின்றார்; அந்த ஒரு வரிக் கேள்விக்கு, கிட்டத்தட்ட 12 பக்கம் சிலப்பதிகாரச் சிறப்புகளை எல்லாம் சொல்லிச் சொல்லி ஆத்துப் போகிறார் பேரா.கண்ணபிரான் இரவிசங்கர். இதுபோல் பல கேள்விகளைக் கண்ணபிரானை நோக்கி எல்லோரும் எழுப்ப வேண்டும். அதற்கு அவர் பதில் சொல்வதாக, இன்னும் பல புத்தகங்கள் எழுத வேண்டும் என்பது என் விருப்பம். ஒரு நூலைப் படித்தால், அது இன்னொரு நூலைப் படிக்க, நூல் பிடித்தாற் போல நம்மை இழுத்துச் செல்ல வேண்டும்! அதுவே சிறந்த நூல்!.
அப்படி, முனைவர் கண்ணபிரானின் 'தமிழா? சம்ஸ்கிருதமா?' என்கிற இந்த நூல். மீண்டும் சிலப்பதிகாரத்தைப் படிக்க என்னை இழுத்துச் செல்கிறது; உங்களையும், ஒரு நூறு புத்தகங்கள் வாசிக்க, இந்த நூல் தூண்டும்!
- திரு. கரு. பழனியப்பன்
