1
/
of
1
Product Description
சுற்றுச்சூழலியல் உலகம் தழுவிய வரலாறு | SUTRUSOOZHALIYAL ULAGAM THAZHUVIYA VARALARU
சுற்றுச்சூழலியல் உலகம் தழுவிய வரலாறு | SUTRUSOOZHALIYAL ULAGAM THAZHUVIYA VARALARU
Author - RAMACHANDRA GUHA
Publisher - ETHIR VELIYEDU
Language - TAMIL
Regular price
Rs. 250.00
Regular price
Sale price
Rs. 250.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
Share
Out of stock
'சுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு' எனும் இந்நூல் சுற்றுப் பயணங்கள், ஆய்வுகளின் பயனாக விளைந்ததாகும். இன்றைக்கு இந்தியா சுற்றுச்சூழலியலைப் பொறுத்தவரை குப்பைத் தொட்டியாகிப் போனது. வளிமண்டலமெங்கணும் மாசு, பயனிழந்த நதிகள், தாழ்ந்து கொண்டே போகின்ற நிலத்தடி நீர்மட்டம், நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கின்ற சீரமைக்கப்படாத கழிவுகள், காணாமற்போன காடுகள் என சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், கவனக்குறைவுடன் செயல்படுத்தப்படுகின்ற அழிவுமிக்க திட்டங்களால் பழங்குடியினரும் விவசாய மக்களும் தமது நிலங்களிலிருந்து தொடர்ந்து வெளியேற்றப்படுகின்றனர். குறுகிய கண்ணோட்டம் கொண்ட தேர்தல் அரசியல் போக்கும், மக்கள் நலக் கொள்கைகள் மீது வள ஆதாரங்களை ஒட்டச் சுரண்டுகின்ற தொழிற்சாலைகள் செலுத்திவரும் செல்வாக்கும், ஊடகங்களுடைய வெறுப்புணர்வும் அனைத்தும் ஒன்றிணைந்து சுற்றுச்சூழலியல் பிரச்சினைகள் பால் கொள்ள வேண்டிய கவனத்தைக் குறைத்து வருகின்றன. இருந்தபோதிலும், இத்தகைய உயிரின வாழ்க்கைச் சூழலியல் கவனமற்ற அகந்தைக் காலம் கடந்துபோம் என்கிற நம்பிக்கை எனக்கு நிறைய உண்டு. புதிய தலைமுறை அறிஞர்களும் ஆர்வலர்களும் 'நிலைபேறுடைமை' என்கிற சொல்லின் முழுமையான பொருளில் செயல்படுத்தக் கூடிய பொருளாதார, சமுதாயக் கட்டமைப்பினை உருவாக்குவதற்குப் பாடுபடுவர். இந்நூல், உலகெங்கணுமிருந்து திரட்டப்பட்டுள்ள எடுத்துக்காட்டுக்களாலும், பின்பற்றத்தக்க முன்மாதிரிகளாலும் அவர்களுக்கு உரமூட்டும் அல்லது ஏதேனும் ஒரு விதத்தில் ஆதரவாக அமையும்! - ராமச்சந்திர குஹா
View full details
