Product Description
சூரிய நமஸ்காரம் | SURYA NAMASKARAM
சூரிய நமஸ்காரம் | SURYA NAMASKARAM
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
Low stock
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் உருவான இந்த சூரிய நமஸ்காரம், இன்று உலகம் முழுதும் பரந்து விரிந்து, ஆரோக்கியத்தை வித்தியாசமின்றி, அட்சய பாத்திரம் போல் வழங்கிக்கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் சூரிய நமஸ்காரத்தின் எல்லை விரிந்துகொண்டே இருக்கிறது. அதன் பயன்பாடு தனிமனித நிலை தாண்டி சமூகக் காரணங்கள், பிற துறைகள் என்றும் பரந்து வருகிறது. மராத்தான் ஓட்டம் போல், சூரிய நமஸ்காரத்தை முன்வைத்து பல நிகழ்வுகள் நடக்கின்றன.
இன்றைய அவசர வாழ்வை அன்றே யூகித்தது போல, குறைந்த நேரத்தில் உடல்-மூச்சு-மனம் வழியே பெரும் மாற்றத்தை சூரிய நமஸ்காரம் ஏற்படுத்துகிறது. அப்படி ஓர் ஆழம்-நுட்பம்-நேர்த்தி-கச்சிதம்-நிபுணத்துவம் இந்த சூரிய நமஸ்காரத்தில் உள்ளது. இப்பயிற்சியை மனித இனத்திற்குக் கிடைத்த பெரும் கொடை எனலாம். அந்தக் கொடையை நன்கு அறியவும் - பயிற்சி செய்து உங்கள் வாழ்வை மாற்றிக்கொள்ளவும் இந்த நூல் உதவும்..
