Product Description
சுரேஷ்குமார இந்திரஜித் சிறுகதைகள் (1981-2020) | SURESHKUMAR INDHRAJITH SIRUKATHAIGAL
சுரேஷ்குமார இந்திரஜித் சிறுகதைகள் (1981-2020) | SURESHKUMAR INDHRAJITH SIRUKATHAIGAL
Language -
Couldn't load pickup availability
Share
Low stock
மேகத்திலிருக்கும்போதும், தரையிறங்கிப் பாயும்போதும் நீரின் அந்தரங்கம் மாறுவதில்லையே! கதைகளின் உருவம், சொல்முறை, மொழி அமைப்பு என மாற்றங்கள் நிகழ்ந்தாலும், சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளில் மாறாத அம்சம் ஒன்று உள்ளது. பொதுச் சமூகத்துக்கு எதிர்க் குரலாக இயங்குபவை இந்தக் கதைகள். வல்லானோ பெரும்பான்மையோ உருவாக்கி நிலைப்படுத்திய பொதுக்களத்தின் நடுவே நின்று, தீவிரமான எதிர்க் குரலில் பேசுபவை இந்தக் கதைகள்.
சமூகத்தின் நியதிகளுடன் ஒட்டி ஒழுகும் வாசக மனத்துக்கு இக்கதைகள் வனைந்து அளிக்கும் அனுபவம் புதிதானது; அசலானது. ஏற்கனெவே தெரியவந்த சங்கதிகளிலும் புதிய மர்மங்களை தோணிக்கவைப்பது. எனவே, பழகிய அனுபவமாக இருந்தபடியே புதிய உச்சங்களுக்கு இட்டுச்செல்வது. நவீனத் தமிழ்ச் சிறுகதையின் தவிர்க்க முடியாத முன்னோடிகளில் ஒருவர் சுரேஷ்குமார இந்திரஜித் என்பதை இவை உறுதிசெய்கின்றன.
- யுவன் சந்திரசேகர்
