Product Description
சலவான் | SALAVAAN
சலவான் | SALAVAAN
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
Low stock
நகரத்தைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்களாகப் பிழைப்பு நடத்தும் பழங்குடிக் குறவரின் வாழ்க்கையை முதன்முறையாகத் தமிழில் முன்வைத்த வகையில் வாய்மொழிச் செய்தியாகவும் செவிவழிச் செய்தியாகவும் பரவலாகப் பேசப்பட்ட படைப்பு இது. படைப்பின் காலகட்டமும் அதன் சமூகப் பின்னணியும் தமிழ்ப் பேச்சுவழக்கும் எழுத்து வழக்கும் பழங்குடியினரின் மொழிவழக்கும் மயங்கி விளங்கிய மொழிநடையும் விமர்சனரீதியாக கவனிக்கப்படவுமில்லை, விவாதிக்கப்படவுமில்லை. தமிழ்ப் படைப்புலகத்தில், தலித் இலக்கியத்தில், அதற்குரிய இடத்தைப் பெறாமலே இன்றுவரை இருந்து வருகிறது இந்தப் படைப்பு. படைப்பின் உள்ளடக்கம், வடிவம், நடை சார்ந்த உள்ளார்ந்த சிக்கல்களும் குறைபாடுகளும் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். அந்தக் குறைபாடுகளை உணர்ந்து அதைத் திருத்தி செம்மைப்படுத்தப்பட்ட பதிப்பு இது.
