Product Description
சகீனாவின் முத்தம் | SAHEENAVIN MUTTHAM
சகீனாவின் முத்தம் | SAHEENAVIN MUTTHAM
Language - தமிழ்
Couldn't load pickup availability
Share
Low stock
மனிதன் கடந்த கால, எதிர்கால சங்கதிகளுக்கிடையில் பக்குவமடைந்து நிகழ்காலப் பாதையில் நடக்க வேண்டியவன். காலத்தின் முழுமையில் மனிதனின் புரிந்தும் புரியாத இயல்புகள் தெய்வழகுகளாகத் தோன்றும் ஆளுமைகளைப் புரிந்துகொள்வது சில சமயம் எளிதாகவும், சில சமயம் மிகச் சிரமமாகவும் பரிணமிக்கிறது. கடந்துபோன நிகழ்வுகளிலிருந்து கற்ற சின்னச் சின்ன அனுபவங்கள், பாடங்கள் நம் எதிர்கால, நிகழ்கால நடப்புகளை எப்படிக் கட்டுப்படுத்துகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டியவை.
முடிச்சுக்கள் நிறைந்த சிக்கலான மாறுபட்ட ரகசிய மனம் கொண்ட முகங்கள் இங்கே பேசுகின்றன. வாழ்க்கையின் பல தரிசனங்களை நிரூபித்துக்கொண்டே எளிமையான விவரங்களுடன் சிக்கலான கதையொன்று தோன்றியுள்ளது.
முற்போக்குவாதி என்று காட்டிக்கொள்ளும் முயற்சியில் வெங்கடரமணன் சனாதனத் தன்மையை மூடிமறைக்கத் தெரியாமல் திறந்து வைக்கிறான். இப்படிப் பல நுட்பங்களை இந்தப் புனைவு விரிவாகத் திறந்து காட்டுகிறது.
பல நினைவுகளிலிருந்து பொறுக்கி எடுத்த நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டு கதை நாயகனின் தனிமொழிச் சுகத்தின் வழியாக விரிந்துகொண்டே போகும் புனைவு, சிறப்பான பாணியில் வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.
