ரப்பர் | ரப்பர்
ரப்பர் | ரப்பர்
Author - JEYAMOHAN
Publisher - Vishnupuram
Language - தமிழ்
Regular price
Rs. 290.00
Regular price
Sale price
Rs. 290.00
Unit price
/
per
Share
Low stock
ரப்பர் - ராப்பர் நாவலின் மையம் பிரான்ஸிஸ்தான். ஆரம்பம் முதலே தயக்கமும் குழப்பமும் கொண்டவனாக இருக்கிறான். இயல்பான நன்மனதுக்கும் காமத்துக்கும் பல்வேறு வகையான அகச்சிக்கல்களுக்கும் நடுவே அவன் அலைமோதுகிறான். அவனில்தான் ஒரு நூற்றாண்டு திசைமாறும் தருணத்தின் தத்தளிப்பு முழுக்க உள்ளது. அவன் அடையும் ஒரு தரிசனமே உண்மையில் இந்நாவல். ஆற்றின் குறுக்காக காரைக் கொண்டுசெல்லும்போது கூச்சலிடும் குழந்தைகளின் குதூகலம் கண்டு அவன் மலரும் கணம்.
இந்நாவலுக்கு உந்துதலாக இருந்ததே நான் என் இளமையில் மாறப்பாடி ஆற்றின் குறுக்காகச் சென்ற சாலையில் ஒரு காட்சிதான். கார் மறுபக்கம் சென்றபின் சன்னல் வழியாக குழந்தைகளுக்குக் கையாட்டிச் சிரித்த அந்த இளைஞன், அவன் ஒரு நாவலாக மாறியிருப்பதை அறிந்திருக்கமாட்டான்.
-ஜெயமோகன்