Skip to product information
1 of 1

Product Description

பிரமிள் | PRAMIL

பிரமிள் | PRAMIL

Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 175.00
Regular price Sale price Rs. 175.00
Sale Sold out

Low stock

PRAMIL - எம். யுவன்: படிமங்களின் தொகுப்பாக பிரமிள் உருவாக்கிய பல கவிதைகள் உள்ளன. ஒரே படிமத்தை விளக்கமாக எழுதிய கவிதைகளும் உள்ளன. நாம் ஏற்கனவே பேசிய கவிதை 'காவியம்'. அதில் நான்கு வரிகளில் ஒரு முழுமையான படிமம் உள்ளது. அவ்வரிகளில் எளிமையாக இருக்கிறது. அழகு இருக்கிறது. சாந்தம் இருக்கிறது. இம்மாதிரியான ஆச்சர்யமான கவிதைகளை எழுதிய பிறகு எப்படி சிடுகான கவிதைகளுக்குப் போக முடிந்தது என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. சுகுமாரன்: பிரமிளின் தனி ஆளுமை அல்லது கவி ஆளுமை என்பதே சிக்கியது. அது இலகுவாக இருக்கும் கணத்தில்தான் 'காவியம்' போன்ற கவிதைகள் உருவாகின்றன. இன்னொரு கவிதை 'எல்லை'. அதில் நேரடியான இரண்டு படிமங்கள் உள்ளன. எரிந்து கருகும் விறகு, எதிர்கிற தந்தி ஆகிய இரண்டு படிமங்களின் இயக்கமாகவே கவிதை முன்னேறுகிறது. கவிதையில் பெரிய சிக்கல்கள் எதுவும் இல்லை. சிடுக்குகளும் கிடையாது. அப்படியானதொரு மனோநிலை தொடர்ந்து பிரமிளுக்கு இருக்கவில்லை என்று நினைக்கிறேன். (பிரமிள் குறித்த உரையாடலில் இருந்து)
View full details