Product Description
பொய்த் தேவு | POITHEVU
பொய்த் தேவு | POITHEVU
Language - தமிழ்
Couldn't load pickup availability
Share
Low stock
பொய்தீவு
- சமூக அந்தஸ்தில் அந்தணர் முதல் தீண்டாதார் வரை, நாசூக்கு நாராயணர்கள் முதல் ரவுடிகள்வரை, நிலச்சுவான்தார்கள் முதல் பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளிகள் வரை பல்வேறு தளங்களில் பிரிந்து இணைந்து உருவாகும் சமூக உறவுகளின் கண்ணிகளைச் சுருக்கமாகவும் நுட்பமாகவும் கோடிகாட்டுகிறது இந்நாவல். சமூக அமைப்பின் அதிகார அடுக்குகள் பற்றிய துல்லியமான படப்பிடிப்பும் இதில் உள்ளது. இரண்டு மூன்று தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்திருப்பவர்களும், ஆண்டவனே கதி என்ற கிடப்பவர்களும் நாவலில் உதிரிகளாக வந்து போகையில் ரவுடிகளும் கீழ்த்தட்டு மக்களும் கூடுதலான கவனம் பெறுகிறார்கள். நாவலின் மையமான கதைமாந்தர்களும் அவர்கள் பேணும் ஒழுக்கமும் சமூகத்தின் மையத்தை அல்லாமல் விளிம்பு நிலைகளைப் பிரதிபலிப்பது தற்செயலானதாக இருக்க முடியாது. சமூகத்தின் கீழ்த்தட்டுகள் குறித்த நாவலாசிரியரின் அக்கறையின் வெளிப்பாடாகவே இருக்க முடியும். தவிர, ஒரு ஊரின் வரலாறு என்பது அவ்வூரின் 'சிறந்த' மனிதர்களின் வரலாறு மட்டும் அல்ல என்ற பார்வையையும் வெளிப்படுத்துகிறது.
