Product Description
பின் நவீனத்துவவாதியின் மனைவி | PIN NAVEENATHUVAVADHIYIN MANAIVI
பின் நவீனத்துவவாதியின் மனைவி | PIN NAVEENATHUVAVADHIYIN MANAIVI
Language - தமிழ்
Couldn't load pickup availability
Share
Low stock
PIN NAVEENATHUVAVADHIYIN MANAIVI - சுரேஷ்குமார இந்திரஜித் தற்செயல்களின் ஊடாட்டங்களைக் கதைகள் ஆக்கியவர், புனைவுக்கும் பொய்க்கும் உறவைக் கதைகளில் கையாண்டவர் எனும் இரு பரவலான சித்திரங்களுக்கு அப்பால் ஆண் - பெண் உறவினரின் நுட்பங்களை, குறிப்பாக வயோதிகத்தின் உறவுச் சிக்கலைப் பற்றி எழுதியவர், குற்றச் சுரண்டலைப் பேசியவர். தொன்மங்களை தலைகீழாகியவர், கனவுகளையும் அவை கலைந்து நிதர்சனத்தை எதிர்கொள்வதையும் எழுதியவர், வாழ்க்கை சரிதைத்தன்மை உடைய கதைகளை எழுதியவர், இணை வரலாறு கதைகளை எழுதியவர், பகடிக் கதைகளை எழுதியவர், சாதி குறித்தும் ஈழம் குறித்தும் அக்கறை கொண்ட கதைகளை எழுதியவர் என பல்வேறு முகங்கள் கொண்டவரும்கூட. பொதுவாக மனிதர்களின் உன்னதங்களின் மீது அவநம்பிக்கை கொண்ட கதைசொல்லி என்றாலும் மானுட நேயத்தையும் அன்பின் வெம்மையையும் சுமந்து செல்லும் கதைகளை அவர் எழுதியிருக்கிறார்.
