Skip to product information
1 of 1

Product Description

பிள்ளைக் கடத்தல்காரன் | PILLAI KADATHALKARAN

பிள்ளைக் கடத்தல்காரன் | PILLAI KADATHALKARAN

Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 195.00
Regular price Sale price Rs. 195.00
Sale Sold out

Low stock

PILLAI KADATHALKARAN - தமிழின் முதன்மையான கதைசொல்லிகளுள் ஒருவர் அ. முத்துலிங்கம். இத்தொகுப்பிலுள்ள 20 சிறுகதைகளில் அநேகமானவை உண்மைச் சம்பவங்களிலிருந்து கலையம்சத்துடன் புனையப்பட்டவை. இவற்றைப் படைக்கும்போது தனக்கென ஆகிவந்த ஒரு சொல் முறையை கையாண்டு வாசகரை வசியம் செய்துவிடுகிறார். இந்த உத்தியை இவ்வளவு கடைபிடிப்பவர்கள் வேறு எவருமில்லை. அதனாலேயே பெரும்பாலும் சிறுபத்திரிகைகளில் தீவிரத் தன்மையுடன் எழுதிவந்த போதிலும் வெகுசன எழுத்தாளருக்குரிய புகழையும், வாசக அங்கீகாரத்தையும் இவர் பெற்றிருக்கிறார். பல்வேறு நிலப்பரப்புகள், மாறுபட்ட மனிதர்கள், பரிச்சயமற்ற கலாச்சாரச் சூழல்களினூடாக நிகழும் இவரது கதைகளின் ஆதாரமான உணர்வு அங்கதம். எனினும், அதனடியில் விலக்க முடியாத நிழல்போல மானிட உணர்வுகளின் ஏக்கமும் நெகிழ்வும் துயரமும் கண்ணீரும் அழியாத சித்திரங்களாய் விரவிக் கிடக்கின்றன. உலகத்து மேடையில் மனிதத் தொகையின் விநோதமான வாழ்வியல் சித்திரங்களால் நெய்த அழகிய கம்பளமாக இத்தொகுப்பை உருவகித்துக் கொள்ளலாம்.

அ.முத்துலிங்கம் தமிழின் முதன்மையான கதைசொல்லிகளில் ஒருவர். சமீப காலங்களில் அவர் எழுதிய இருபது கதைகள் கொண்ட அவரது சமீபத்திய சிறுகதைத் தொகுப்பு இது. தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் கலையின் இழைகளால் எதார்த்தத்திலிருந்து பின்னப்பட்டவை. அவர் தனது தனித்துவமான மொழியால் வாசகனை மயக்குகிறார். இந்த மொழி அவருக்கு முக்கிய எழுத்தாளர்களை நினைவூட்டும் புகழையும் வாசகர்களையும் பெற்றுத்தந்தது. பல்வேறு நிலப்பரப்புகள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் மற்றும் அறிமுகமில்லாத கலாச்சாரங்களுக்கு மத்தியில் அவரது கதைகள் நகைச்சுவையின் கருப்பொருளைச் சுற்றி வருகின்றன. ஆனாலும், நிழலைப் போல அதன் அடியில், மனச்சோர்வு, ஏக்கம், பாதிப்பு போன்ற மனித உணர்வுகள் பரவுகின்றன.

View full details