Product Description
ஒரு டீ சாப்டலாமா? । ORU TEA SAAPDALAMA?
ஒரு டீ சாப்டலாமா? । ORU TEA SAAPDALAMA?
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
Low stock
ஒரு டீ சாப்டலாமா? புத்தகத்தின் அட்டை நிறைய வண்ணங்களில் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட நிறத்தில் அட்டை கொண்ட புத்தகம்தான் அனுப்பப்படும் என்கிற முன்முடிவுக்கு வர வேண்டாம். அன்றன்று பிரிக்கப்படும் புத்தக பெட்டியில் இருக்கும் அட்டை நிறங்களே அனுப்பி வைக்கப்படும். புரிதலுக்கு நன்றி.
புத்தக அறிமுகம்:
தனிமையான நாட்களில்
வெறுமையான நிமிடங்களை கடத்துவதற்காக
ஒலிபெருக்கியில் ஓடும் பழைய பாட்டொன்றை
தப்புத் தப்பான பாடல்வரிகளோடு,
கூடவே சேர்ந்து சத்தமாய் பாடிக்கொண்டு,
அந்தப் பாடல் முடிந்ததும்…
பேருந்தின் ஜன்னல் கம்பியில்
வழிந்து குதிக்கக் காத்திருக்கும் மழைத்துளிகளாய்
கண்களின் ஓரம் தேங்கி நிற்கும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு…
சற்று நேரம் ஆசுவாசம் அடைந்துவிட்டதாக
நானே என்னை ஏமாற்றிக்கொள்வேன்…
அப்படியான சில நாட்களில்
நான் எனக்காக எழுதிக்கொண்ட வரிகளாகவே
முதலில் இப்புத்தகத்தை நான் தொகுத்து வைத்தேன்…
தனிமை
கடவுள்
பதட்டம்
பகடி
தத்துவம்
ஆசை
வாழ்க்கை
பசி
உண்மை
உளறல்
பிதற்றல்
இவையெல்லாம் எல்லோருக்கும் பொது என்பதால்
இத்தொகுப்பில் இருக்கும் வரிகள் என்னையும் உங்களையும்
இணைத்து ஒரு உரையாடலுக்கு வழிவகுக்கும் என்றே அனுமானிக்கிறேன்.
அப்படி ஒரு உரையாடல் துவங்குமாயின்,
நாம்
‘ஒரு டீ சாப்டலாமா?’
– மனோபாரதி
08-ஆகஸ்ட்-2024
