Product Description
ஒரு பாட்டு கொஞ்சம் பின்னணி | ORU PAATTU KONJAM PINNANI
ஒரு பாட்டு கொஞ்சம் பின்னணி | ORU PAATTU KONJAM PINNANI
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
Low stock
ஆளுயரக் கண்ணாடியில் முகம்பார்ப்பதும், அலங்கார அறையை எட்டிப்பார்ப்பதும் வெளிச்சொல்ல முடியாத விநோத ரசனை. இதே மாதிரியான ரசனையைத் தருவதே திரைப்பாடல்களின் பின்னணிக் கதைகள்.
இருபதாண்டுகளாகத் திரைப்பாடல் துறையில் தனித்த அடையாளத்தைத் தக்கவைத்துள்ள யுகபாரதி, இந்நூலில் அவர் பாடல்கள் உருவான சுவாரஸ்யத் தருணங்களைத் தெரிவித்திருக்கிறார்.
ஒரு பாடலுக்குப் பின்னே இத்தனைச் சிரத்தையும் செழுமையும் இருக்கின்றனவா என யோசிக்க வைக்கும் அழகிய பதிவுகள்.
திரைப்பாடலை மிகுதியாகக் காதலிப்பவர்களுக்கு இப்பதிவுகள், பூங்காக்களில் போடப்பட்டுள்ள கல் மேசைகளையும் நாற்காலிகளையும் நினைவூட்டுபவை.
சாய்ந்தும் சரிந்தும் பரிமாறிக்கொள்ள ஏதுவான எண்ணிறைந்த சம்பவங்களை இந்நூலில் யுகபாரதி வழங்கியிருக்கிறார். அவையே அவரை மற்ற பாடலாசிரியர்களிடமிருந்து வித்யாசப்படுத்திக் காட்டுகின்றன. அவர் பாடல்களைப் போலவே இந்நூலும் காலங்கடந்தும் வாழுமென்று சொல்லலாம்.
ஒருதுறையில் ஒருமனிதன் மேலேறி வந்த கதையாகவும் இப்பதிவுகளை முன்வைக்கலாம்.
