Product Description
நிழல் நதி | NIZHAL NATHI
நிழல் நதி | NIZHAL NATHI
Language - தமிழ்
Couldn't load pickup availability
Share
Low stock
முதல் காதலி அல்லது காதலன் என்பது எழுதித் தீராத கருப்பொருள். நினைவேக்கங்களின் தவிர்க்க முடியாத அதிர்வுகளில் முதல் காதலுக்குத் தனி இடம் உண்டு. சலிக்காத உணர்வாய் நினைவுகளில் நீடித்திருக்கும் இந்தச் சலனத்தின் புதியதொரு பரிமாணத்தைக் காட்டுகிறது 'நிழல் நதி'.
காலத்தின் ஓட்டத்தில் மறைந்த தடங்களை உருவாக்கும் காதலின் வலியைப் பேசுகிறது இந்த நாவல். கருவறுக்கப்பட்ட காதலின் ஏக்கம் எவ்வளவு ஆழமான காயத்தை ஏற்படுத்துகிறது என்பதை அது ஒருவரது ஆளுமையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் நிழல் நதியின் ஓட்டம் உணர்த்துகிறது. பிடிவாதத்தின் வலிமையையும் வாழ்க்கையையே மாற்றிவிடக்கூடிய அந்த வீரியத்தையும் காட்டித் தருகிறது.
கண்ணுக்குத் தெரியாத நதியாய் ஒவ்வொரு மனத்திலும் ஓடிக்கொண்டிருக்கும் உணர்வுப் பிரவாகத்தைக் காட்டும் இந்த நாவல் ஒரு காலகட்டத்தின், ஒரு நிலப்பரப்பின் வாழ்வையும் தீட்டிச் செல்கிறது.
தாமிரபரணியில் சங்கமிக்கும் உப்பாற்றின் கரைகளில் இயங்கும் வாழ்வும் மானுட அனுபவங்களும் அந்த நதியின் மீது நிழல்களாய்ப் படர்கின்றன.
