Product Description
முயல் தோப்பு | MUYAL THOPPU
முயல் தோப்பு | MUYAL THOPPU
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
Low stock
நாம் வாழாத அசாதாரண வாழ்க்கையொன்றை பாஸ்கர்சக்தி வாழ்ந்து விடவில்லை.நம் எல்லோருக்கும் வாய்த்த வாழ்க்கையில் நமது பார்வைக்குப் படாத அசாதாரணக் காட்சிகள் அவருக்குக் கிடைக்கின்றன.அல்லது நாம் சாதாரணம் என்று ஒதுக்கி விட்டவைகள் அவருக்கு அசாதாரணமாகத் தோன்றுகின்றன.சாதாரணமோ அசாதாரணமோ வாழ்வின் இண்டு இடுக்குகளில் தனது பார்வையை ஊடுருவிச் செலுத்த முடிகிறது அவரால்.வாசகரின் கவனம் சிறிதும் பிசகாமல் தன்வயப்படுத்தி புனல் வைத்து எண்ணை ஊற்றுவது போல் நமக்குள் நிரப்பி விடுகிறார்.
ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைப்பைப்போல,நடைபழகும் குழந்தை நிலம் நோகாமல் அடியெடுத்து வைப்பதுபோல யாருக்கும் தொந்தரவு தராத தனித்த எள்ளல் மொழிதான் அவரது புனைவின் முதலீடு.பலகதைகளில் எள்ளல் மொழியாகவும்,இன்னும் சிலவற்றில் எள்ளலே கதையாகவும் ஆகியிருக்கிறது.சுவலியின் தீவிரத்தை ஆனவரைக்கும் இலகுவாக்குவதற்காக எள்ளலை ஊடகமாகக் கையாளுகிறார் சாப்ளினைப்போல.தன் கதைகளில் வரும் கனமான நிகழ்வைக்கூட அதன் தீவிரத்தன்மையைக் குறைத்து,நீருக்குள் பாறையைப் புரட்டுவது போன்ற இலகுவாக மாற்றுகிறார்.
