1
/
of
1
Product Description
மினியேச்சர் மகாபாரதம் | MINIATURE MAHABARATHAM

Publisher - SURIYAN PATHIPPAGAM
Language - TAMIL
Regular price
Rs. 200.00
Regular price
Sale price
Rs. 200.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
Share
Low stock
‘மகாபாரதம்’ என்பதை பதினெட்டு நாள் குருக்ஷேத்திரப் போர் என்கிற அளவில் தப்பாகப் புரிந்து கொண்டிருப்பவர்கள் நிறையப் பேர். ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மறுபடியும் தர்மம் வெல்லும்’ என்பதே மகாபாரதம் சொல்லும் நீதி. இந்த நீதியைத் தாண்டி, சகோதர யுத்தத்தைத் தாண்டி, பகவத் கீதை எனும் தத்துவத்தையும் தாண்டி, மகாபாரதம் சொல்லும் வாழ்க்கை நீதிகள் ஏராளம்.
அம்புப்படுக்கையில் மரணத்தின் வாசனையை உணர்ந்தபடி படுத்திருக்கும் பீஷ்மர், பாண்டவர்களுக்கு அத்தனை நீதிகளை போதிக்கிறார். இன்னொரு பக்கம் விதுரர் உரைக்கும் நீதி வியக்க வைக்கிறது. ‘இப்படி ஒரு போர் நிகழ்த்தி இத்தனை பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்துவிட்டு, எனக்கு இந்த அரியணை தேவையா?’ என தர்மருக்குள் நிகழும் மனப்போராட்டம் நெகிழச் செய்கிறது.
யட்சன் என்ற அரக்கனாக தர்ம தேவதை வந்து கேட்கும் கேள்விகளுக்கு தர்மர் அளிக்கும் பதில் ஆச்சரியம் தருகிறது. ‘காற்றினும் விரைந்து செல்லக்கூடியது மனம்’, ‘உலகில் புல்லை விட அதிகமானது கவலை’ என உயரிய தத்துவங்கள் ஒற்றை வரிகளில் வந்து போகின்றன. உயிரினங்கள் வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்படுவது போல, காலமானது எல்லாவற்றையும் அழித்துவிடுகிறது என்ற பேருண்மையை நம் முன்னோர்கள் மிக எளிமையாக இந்தக் காப்பியத்தில் உணர்த்தி இருக்கிறார்கள்.
நட்பு எது, துரோகம் எது, பொருள் சேர்க்கும் வழி எது, பகையை வெல்லும் வழி எது, மகிழ்ச்சி எது, துக்கம் எது, வாழ்க்கை தர்மம் எது என எல்லாவற்றையும் சொல்லும் முழுமையான நூல் இது.
இந்தத் தலைமுறை இளைஞர்களும் புரிந்துகொள்ளும் எளிய நடையில், அழகு தமிழில் இந்த நூல் வெளியாகிறது.
View full details