Skip to product information
1 of 1

Product Description

கொடிவழி | KODIVAZHI

கொடிவழி | KODIVAZHI

Author - MA. KAMUTTHURAI
Publisher - ETHIR VELIYEDU

Language - TAMIL

Regular price Rs. 399.00
Regular price Sale price Rs. 399.00
Sale Sold out

Low stock

தமிழிலில் அபூர்வம்

ம. காமுத்துரை அவர்களின் கொடிவழி  தேனி வட்டாரத்தில் இயங்கிய ஒரு பஞ்சாலையில் 70களில் நடைபெற்ற தொழிலாளர்களின் ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்தின் பின் திரைக் காட்சிகளை உயிர்ப்போடு முன் வைக்கிறது. 
இதுபோன்ற நாவல்கள் தமிழில் அபூர்வம். தொழிலாளர்களது போராட்டத்தைப் பற்றி மட்டும் பேசாமல் முதலாளி வர்க்கத்தின் தாக்குதல்கள், அவர்களின் மிரட்டல்கள் போன்றவை எளிய தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதியினரின் உளவியலை எப்படியெல்லாம் பாதிக்கிறது?அவர்களுடைய குடும்பத்தின் பெண்கள் எப்படி இந்தத் தாக்குதல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை கூடுதல் குறைவு இல்லாமல் வெகு  யதார்த்தமாகவும் இயல்பாகவும் நாவலில் படைத்துக் காட்டியுள்ளார். 

மாக்சிம் கார்க்கியின், தாய், தகழியின் தோட்டியின் மகன் நாவல்களைப் போலவே எங்குமே குரலை உயர்த்தாமல் உயிருள்ள வாழ்க்கையை அப்படியே அதன் வண்ணங்களோடும் வாசத்தோடும் படைத்துள்ளார் என்பது நாவலின் சிறப்பம்சம்.

இந்நாவல் இலக்கிய வெளியில் மிகுந்த கவனத்தை பெறும்.

ச. தமிழ்ச்செல்வன்
View full details