1
/
of
1
Product Description
கிருமி கதைகள் | KIRUMI KADHAIGAL
கிருமி கதைகள் | KIRUMI KADHAIGAL
Publisher - YAAVARUM (BE4BOOKS)
Language - TAMIL
Regular price
Rs. 225.00
Regular price
Sale price
Rs. 225.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
Share
Low stock
பசியால்தான் எங்களின் மரணம் நேரப்போகிறது என்று தோன்றியது. எங்கள் மேல் வளர்ந்து எங்களை ஆட்கொண்டிருக்கும் இந்தக் கொடிய பாசியால் அல்ல. நான்காவது மாதம் முடிவுற்றபோது இப்படியான மனநிலையில்தான் நாங்கள் இருந்தோம். அப்போதுதான் மிகப் பயங்கரமான ஒன்றைக் கண்டுபிடித்தேன். ஒருநாள், மதியம் நெருங்குவதற்குச் சற்று முன்னால், மீதமிருந்த பிஸ்கட்டுகளை எடுத்துக்கொண்டு கப்பலில் இருந்து வெளியே வந்தேன். கூடாரத்தின் நுழைவாயிலில் என் காதலி அமர்ந்துகொண்டு எதையோ உண்பதைக் கண்டேன். ’அது என்னது கண்ணே?’ நான் கரையில் இறங்கியதும் கேட்டேன். என் குரலைக் கேட்டதும் அவள் குழப்பமடைந்தாள். திரும்பிக்கொண்டாள். தந்திரமாக எதையோ கரையின் விளிம்பை நோக்கி வீசினாள். ஆனால் அது முன்னாலேயே விழுந்துவிட்டது. எனக்குள் ஒரு சந்தேகம் கிளம்பியது. குறுக்கே நடந்து சென்று அதை எடுத்தேன். அது பழுப்பு நிறப் பூஞ்சையின் ஒரு துண்டு.
-நூலிலிருந்து
View full details
-நூலிலிருந்து
