Product Description
கசார்களின் அகராதி: பெண் பிரதி | KAASAARKALIN AGARATHI: PEN PIRATHI
கசார்களின் அகராதி: பெண் பிரதி | KAASAARKALIN AGARATHI: PEN PIRATHI
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
Low stock
இது முழுமையான ஓர் உலகம் குறித்த மற்றும் தொலைந்துவிட்ட சிறந்த மனிதர்களைப் பற்றிய புதினம். இதுவோர் அறிவின் புத்தகம். நிகழ்காலத்தைப் பற்றியது மற்றும் சிலநேரங்களில் எதிர்காலத்தைப் பற்றியதும், அதனால்தான் ஆயிரத்தி நூறு வருடங்களுக்கு முன்பிருந்து தொடங்குகிறது. இது மிகச்சிறந்த (மற்றும் கட்டுக்கடங்காத) மூன்று அறிவாளிகளைப் பற்றியது -- ஒரு கிறிஸ்தவர், ஒரு யூதர், ஒரு மொஸ்லம் -- உலகம் எவ்வழியிலிருக்க வேண்டுமெனும் இவர்களின் விவாதம் முடிவுறவேயில்லை. இது இரண்டு பிரதிகளாக வருகிறது, ஒன்று ஆண் மற்றொன்று பெண், இரண்டும் பதினேழு (முக்கியமான) வரிகளில் மட்டுமே வேறுபடுகின்றன. வாசகர்கள் தங்களுக்கு விருப்பமான ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம், ஒரு கடவுச்சீட்டைப்போல: கசார்களின் உலகத்தில் அவர்களது பயணம் அவர்களுடைய தேர்வைப் பொறுத்து மாறுபடும். இரண்டு வகையிலும், காதல், மரணம், மற்றும் கிட்டத்தட்ட பிரபஞ்சத்தின் அத்தனை சாகசத்திற்கான சாத்தியக்கூறுகளும் கொண்ட புதினத்திற்குள் தங்களை இழக்க விரும்புபவர்கள் பாவிச்சைக் கையிலெடுத்து மூழ்கலாம். அவர்கள் மெய்மறந்து பரவசத்திற்குள்ளாவார்கள்.
