Skip to product information
1 of 1

Product Description

கர்நாடக இசையின் கதை

கர்நாடக இசையின் கதை

Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 175.00
Regular price Sale price Rs. 175.00
Sale Sold out

Low stock

கர்நாடக இசையின் கதை -

இசையுலகத்திற்கு உள்ளும் வெளியிலும் நிகழ்ந்துவரும் பல்வேறு விவாதங்கள், எழுப்பப்படும் கேள்விகள் ஆகியவை முதல்முறையாக இந்த நூலில்தான் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன. இசையுலகினுள் நிலவும் சாதி, பாலினம், மொழி, மதம் சார்ந்த பாகுபாடுகளைப் பிரச்சனைப்படுத்தி விவாதிக்கிறார் கிருஷ்ணா. வாய்ப்பாட்டுக் கலைஞர்களுக்கும் பிற கலைஞர்களுக்கும் இடையே இருக்கும் படிநிலைகள், கச்சேரிக்கான கட்டமைப்பு, பாடல்களின் தேர்வு ஆகியவற்றையும் கிருஷ்ணா கேள்விக்கு உட்படுத்துகிறார்.

கலை வடிவின் நோக்கம் அதன் வெளிப்பாட்டுடன் இருக்கும் உறவை முன்வைத்து இசையின் பல கூறுகளை விவரிக்கிறது. இசைக்கும் இறைமை நிகழ்கலம் ஆகியவற்றிற்கும் இடையிலான உறவுகளையும் நுணுக்கமாக ஆராய்கிறார். கர்நாடகா, இந்துஸ்தானி இசை வடிவங்களை ஒப்பிட்டு விவாதிக்கிறார். நாட்டியத்திற்கும் இசைக்குமான உறவைப் பற்றியும் பேசுகிறார். இசை வரலாறு குறித்த சுருக்கமான சித்திரத்தையும் தீட்டியிருக்கிறார்.

கிருஷ்ணாவின் சிந்தனைகளையும் கருத்துகளையும் ஒருவர் நிராகரிக்கலாம். ஆனால் அவருடைய ஆழ்ந்த அக்கறையையும் உழைப்பையும் மறுக்க முடியாது. அவற்றை முன்வைப்பதில் அவர் கைக்கொள்ளும் அறிவார்த்தமான முறைமையை மதிக்காமல் இருக்க முடியாது. இந்த நூலின் ஆகப்பெரிய வலிமை இதுதான்.

View full details