Product Description
கடவுள் என்னும் மாயை | KADAVUL ENNUM MAAYAI
கடவுள் என்னும் மாயை | KADAVUL ENNUM MAAYAI
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
Low stock
இருளிலிருந்து வெளிச்சத்திற்கு மகான்கள் தமது காலத்தின் சர்வாதிகாரத்திற்கும், உடமை வெறிக்கும், அநீதிகளுக்கும் எதிரான பொது நீதியை மிக்க துணிவுடன் தருகிறார்கள். ஆனால், பின்வரும் பூசாரிகள் அவற்றிற்கு நேரெதிராக மக்களை ஒடுக்கி, ஆளும் வர்க்கத்தின் கேடயமாகவே மதங்களை அவர்களின் பெயரால் உருவாக்கினர் என்பதே உலகெங்கும் நாம் காணும் நடைமுறையாக உள்ளது. 14, 15ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் பெரும் சர்வாதிகாரிகளாகிய, அறம் தவறிய போப்புகளை எதிர்த்து, கிறித்துவத்தில் உருவானதே எதிர்ப்புரட்சி மார்க்கமான ப்ராட்டஸ்டென்ட் கிறித்துவம். முகமது நபியின் மரணத்தின் பின் பதவிப் போட்டியில் இரண்டுபட்ட இஸ்லாம் இன்று வரை சொந்தச் சகோதரர்களையே கொன்றுகுவித்துக் கொண்டுள்ள அவலத்தைத் தினமும் பார்க்கிறோம். மதம், கடவுள் இவற்றின் குறைகளை, அநீதிகளை எத்தனை பேசிய போதும் வறுமையும், அறியாமையும், தனியுடமையும், சுரண்டலும் மிக்க உலகத்தில், மதம் மயக்கும் அபின் மட்டுமல்ல, அதுவே குரலற்ற அபலைகளின் குரலாக, இதயமற்ற உலகின் இதயமாகி உள்ளது என்று காரல் மார்க்ஸ் கூறுவதை நாம் மறந்துவிட முடியாது. பல ஆயிரம் ஆண்டுகால இருள், ஒரு நொடியில் விலகாது. ஆனால், கீழை வானம் சிவக்கிறது என்ற புதிய நம்பிக்கையை இந்நூல் வளர்க்கிறது.