Product Description
இச்சிகோ இச்சியே | ICHIGO ICHIE
இச்சிகோ இச்சியே | ICHIGO ICHIE
Language - தமிழ்
Couldn't load pickup availability
Share
In stock
ICHIGO ICHIE - வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடுவதற்குத் தேவையான ஒரு திறவுகோல் நம் அனைவரிடமும் உள்ளது. இச்சிகோ இச்சியேதான் அது! நம் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கின்ற கணங்கள் ஒவ்வொன்றும் ஒரே ஒரு முறைதான் நிகழும் என்பதால் அதை நாம் நழுவ விட்டுவிட்டால், அதை நாம் என்றென்றும் இழந்துவிடுவோம். இதை ஜப்பானியர்கள் இச்சிகோ இச்சியே என்று அழைக்கின்றனர். ஒருவரை சந்திக்கும்போதும் சரி, அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளும்போதும் சரி, குறிப்பிட்ட அந்த சந்திப்பு தனித்துவமானது என்பதை எடுத்துரைக்கும் வகையில் ஒருவருக்கொருவர் இச்சிகோ இச்சியே என்று கூறிக் கொள்கின்றனர். இந்நூலிலிருந்து இவற்றை நீங்கள் கற்றுக் கொள்ளலாம்:
*ஒவ்வோர் ஆண்டும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே பூக்கின்ற செர்ரிப் பூக்களின் வருகையை ஜப்பானியர்கள் கொண்டாடுவதைப்போல், சட்டென்று கடந்து போகின்ற கணங்களின் அழகைக் கொண்டாடுவது எப்படி?
* உங்களுடைய ஐம்புலன்களின் உதவியோடு நங்கூரமிடுவது, கடந்த காலத்திற்குள்ளும் வருங்காலத்திற்குள்ளும் உங்களைப் பிடித்துத் தள்ளுகின்ற அச்சங்கள், கவலைகள், வருத்தங்கள், கோபங்கள் போன்றவற்றிலிருந்து நீங்கள் விடுபடுவது எப்படி?
* இச்சிகோ இச்சியேவைப் பயன்படுத்தி உங்களுடைய இக்கிகையைக் கண்டுபிடிப்பது எப்படி?
