Skip to product information
1 of 1

Product Description

என் மகன் குருதத் | EN MAGAN GURUDUTT

என் மகன் குருதத் | EN MAGAN GURUDUTT

Publisher - ETHIR VELIYEDU

Language - TAMIL

Regular price Rs. 180.00
Regular price Sale price Rs. 180.00
Sale Sold out

Low stock

குருதத் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய அவசியம் இருந்ததா? இந்தக் கேள்வியை முன் வைக்கிறார் அசோகமித்ரன்.

இந்த மனிதன் எப்போதும் கூட்டத்திலும் தனியாகவே இருந்தான். அவன் தற்கொலையை ஒட்டுமொத்தமாக துணிச்சலான செயல் என்றோ, கோழைத்தனமான செயல் என்றோ ஒதுக்கிவிட முடியாது.

தற்கொலை பல முறை எதிர் உணர்வுகளின் அறிகுறி. கலகம், பொருளற்ற வார்த்தைகளுக்கு எதிரான மௌனம். தற்கொலை ஒரு பெரும் படைப்பைப் போல மனதின் தனிமையில் உருவாகிறது என்று சொல்லி அதை ‘ஹேப்பி டெத்’ என்று ஆல்பர்ட் காம்யூவால் எப்படிக் கொண்டாட முடிந்தது? மரணத்தின் குளிர்ச்சியை அறிய முடியாத கைகள் வாழ்க்கையின் கதகதப்பை எப்படி உணரும்?

மனித இயல்பு புத்திக்கு முழுமையாக எட்டுவதில்லை.

‘காதல் என்பது மிகவும் அற்பமானது. அது பிறப்பதற்கும் அழிவதற்கும் அற்ப காரணங்களே போதும்’
என்று ஜெயகாந்தன் கூறுகிறார்.

எல்லா மனிதர்களும் ரகசியத்துடன் புதைக்கப்படுகிறார்கள். அதற்கு குருதத்தும் விலக்கல்ல.

கே. நல்லதம்பி
View full details