1
/
of
1
Product Description
டாக்டர் வைகுண்டம் கதைகள்-2 | DOCTOR VAIGUNDAM KATHAIGAL-2
டாக்டர் வைகுண்டம் கதைகள்-2 | DOCTOR VAIGUNDAM KATHAIGAL-2
Publisher - EZHUTHU PRASURAM
Language - TAMIL
Regular price
Rs. 280.00
Regular price
Sale price
Rs. 280.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
Share
Low stock
டாக்டர் என்பவர் நம் உடல் உபாதையின் மூலகாரணத்தைச் சரியாகக் கண்டுபிடித்து, சரியான மருந்து கொடுத்து சொஸ்தமாக்கிவிட மாட்டாரா, அதற்கு சல்லிசாகக் காசு வாங்கிப் போதும் என்று சொல்லிவிட மாட்டாரா, இல்லை காசு செலவழியட்டும், ஆனால் குணப்படுத்திவிட்டால் போதும் என்ற ஏக்கம் விரவிக்கிடப்பதே கண்கூடு. என் குடும்பத்தில் ஆறு பேருக்கு மேல் கேன்சரில் மடிந்ததால், இதையெல்லாம் பார்த்து, வலித்து, அலுத்துவிட்ட எனக்குமே உள்ள இந்த ஏக்கத்தைத் தீர்க்கும் வடிகாலாக 'டாக்டர் வைகுண்டம்' என்னும் ஒரு கற்பனை ஆசாமியைத் தோற்றுவித்து எழுத ஆரம்பித்தேன். டாக்டர் வைகுண்டத்தை புத்திசாலியான, மிடுக்கான, நேர்மையான காசுக்கும் பதவிக்கும் அடிபணியாத கஷ்டங்களுக்குத் தோள் கொடுக்கும் மனிதநேயம் மிகுந்த மனிதராகச் சித்தரித்து எழுத எழுத, வைகுண்டம் நிஜமானவரா என்று பலரும் நம்பும் அளவுக்கு மனதைக் கவர்ந்தவரானார். இது என் எழுத்தால் ஏற்பட்டது என்னும் கர்வத்திற்கு இடமே இல்லை. சமூகத்தில் இதுபோன்ற ஓர் உண்மைத் தேவை இருப்பதுதான் காரணம் என்பது எவ்வித பாசாங்குகளும் இல்லாமல் எனக்குத் தெரிகிறது.
View full details
![டாக்டர் வைகுண்டம் கதைகள்-2 | DOCTOR VAIGUNDAM KATHAIGAL-2](http://www.jayambookcentre.com/cdn/shop/files/Frontwrapper-VaikundamKathaigal_1800x1800_86e63875-9f9b-4faf-92a6-373d3e852396.webp?v=1710596305&width=1445)