Skip to product information
1 of 1

Product Description

கொரோனா | CORONA

கொரோனா | CORONA

Publisher - UYIRMMAI

Language - TAMIL

Regular price Rs. 160.00
Regular price Sale price Rs. 160.00
Sale Sold out

Low stock

2019 இறுதியில் தொடங்கிய கொரோனா பெருந்தொற்றும், அதன் நீட்சியான ஊரடங்கு காலகட்டமும் இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்க்கை முறையையும் புரட்டிப் போட்டிவிட்டது. இந்தக் காலம் சவால்களும், இன்னல்களும், நெருக்கடிகளும், குழப்பங்களும், அச்சங்களும்,  சில சாதகமான அம்சங்களும் என அத்தனையும் சேர்ந்து ஒரு வகையான கலவையாக இருந்தது. இந்தக் காலத்தில் நாம் எதிர்கொண்ட சில முக்கியமான பிரச்சினைகள் பற்றி இந்தப் புத்தகம் பேசுகிறது.

கொரோனா என்னும் கிருமி மட்டுமல்ல, மனிதர்களின் பலவீனங்களும், சிறுமைகளும், போதாமைகளும், சுயநலங்களும், பாரபட்சங்களும் கூட இந்தக் காலத்தில் மிகுந்திருந்தது. இந்த நெருக்கடி நிலையில் இருந்து நாம் வெளியே வரும்போதுதான் இதை எப்படி நாம் மோசமாக எதிர்கொண்டிருக்கிறோம் எனத் தெரிய வரும். அப்படி வெளியேவரும் நாளில், ஒன்றே ஒன்றை மட்டும் நினைத்து நாம் ஆசுவாசமடையலாம். “எதிர்காலத்தில் கொரோனா போன்ற ஒரு நோய் வந்து நாம் முடங்க நேரிட்டால், அதை நாம் இந்தளவிற்கு மோசமாக எதிர்கொள்ள மாட்டோம்” என்பதே அது. அந்த வகையில்  இந்தக் காலத்தில் இருந்து நாம் பல படிப்பினைகளையும், அனுபவங்களையும் பெற்றுக்கொண்டிருக்கிறோம்.

View full details