Skip to product information
1 of 1

Product Description

காவேரிப் பெருவெள்ளம் (1924) | CAUVERY PERUVELLAM

காவேரிப் பெருவெள்ளம் (1924) | CAUVERY PERUVELLAM

Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 275.00
Regular price Sale price Rs. 275.00
Sale Sold out
Shipping calculated at checkout.

Low stock

CAUVERY PERUVELLAM 1924 - 2018ஆம் ஆண்டு கேரளாவில் பெருவெள்ளம் விளைவித்த பேரழிவால் மலையாளிகள் 1924ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை நினைவுகூர்ந்தனர். அவ்வெள்ளம் கேரளத்தைவிடத் தமிழகத்தையே திக்குமுக்காடச் செய்தது. இந்நூல் அதை விவரிக்கிறது. வளர்ச்சிக்காகக் காடுகளை அக்காலத்தில் அழித்ததால் மேற்குமலையில் பெய்த மாமழை அங்கு தங்காமல் பொலபொலவெனத் தரையிறங்கி பவானி, காவேரி, கொள்ளிட நதிகளில் பாய்ந்து ஆறுகளைப் பிளந்து, பாலங்களைப் பெயர்த்து, புவியைக் கீறி, சாலையைச் சல்லிசல்லியாக்கி மேற்குமலையடிவாரம் தொடங்கி கிழக்குக் கடற்கரைப் பேரழிவை விளைவித்தது. இயற்கையான மேடுபள்ளத்தோடு செயற்கையான சாதிப் படிநிலைக்கேற்ப வாழிடம் கட்டப்பட்டிருந்தாலும் பெருவெள்ளம் அக்ரஹாரம் முதல் சேரிவரை வாரிச் சென்றது. இருப்பினும், படிநிலைச் சாதியம் மீண்டும் புனரமைக்கப்பட்டதை இந்நூல் விவாதிக்கிறது. சாமி சிலைகளைச் சாலைக்கு இழுத்து தமிழகத்தில் பத்தாயிரம்பேரைக் கொன்று பலரை அநாதையாக்கிய பெருவெள்ளத்தைப் பற்றி பிராமணர், செட்டியார், முதலியார், நாயுடு, நாயகர், சாயுபு எனப் பலரும் சிந்து பாடினர். மலையாளத்தைவிடத் தமிழில் கூடுதலாகப் படைக்கப்பட்ட இப்பெருவெள்ளச் சிந்துகளும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன
View full details