Skip to product information
1 of 1

Product Description

பஷீர் கதைகள் | BHASHIR KATHAIGAL

பஷீர் கதைகள் | BHASHIR KATHAIGAL

Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 575.00
Regular price Sale price Rs. 575.00
Sale Sold out

Low stock

BASHIIR KATHAIGAL - முற்போக்கு இலக்கியம் முதன்மையான நடைமுறையாக இருந்த காலப் பகுதியில் எழுத்தில் ஈடுபட்டவர் பஷீர். 'ஜீவன் சாஹித்ய பிரஸ்தானம்' (வாழ்விலக்கிய இயக்கம்) என்று அழைக்கப்பட்ட போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் பஷீர், தகழி சிவசங்கர பிள்ளை, பி. கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி ஆகியோர். இவர்களின் எழுத்தில் புதுவகையை உருவாக்கியவர் பஷீர். நடைமுறை உலகை மாற்றிப் புதிய உலகைச் சமைப்பதற்கான அறைகூவலைப் பிற எழுத்தாளர்கள் முன்னிருத்தினர். இந்த முழுமையற்ற உலகத்தை மாற்றி முழுமையான உலகைப் படைப்பது பற்றிய கனவை முன்வைத்தார்கள். ஆனால் பஷீர் இந்த முழுமையற்ற உலகை நேசித்தவராக இருந்தார். தீமையும் கீழ்மையும்இந்த உலகின் உயிரோட்டமான அம்சங்கள் என்று உணர்ந்திருந்தார். நடைமுறை உலகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களேஅவரது கதை மாந்தர்களாக இருந்தனர். அவர்களது வாழ்க்கையே அவருக்குக் கதை நிகழ்வுகளாக இருந்தன. பொறுக்கிகள், வேசிகள், திருடர்கள், முட்டாள்கள், பைத்தியங்கள், ஏமாற்றுப் பேர்வழிகள் எல்லாரும் அவருடைய அன்புக்குரிய பாத்திரங்களாக இருந்தனர்.அந்தப் பாத்திரங்கள்மீது வாசகரும் அன்பு பாராட்டக் கட்டாயப்படுத்தப்பட்டதுதான் பஷீர் கலையின் வெற்றி.
View full details