1
/
of
1
Product Description
அத்தங்கி மலை| ATTHANGI MALAI
அத்தங்கி மலை| ATTHANGI MALAI
Author - AJAY PRASATH
Publisher - ETHIR VELIYEDU
Language - TAMIL
Regular price
Rs. 250.00
Regular price
Sale price
Rs. 250.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
Share
Low stock
பொதுவாகத் திராவிட மொழிக் குடும்பத்திலிருந்து மொழிபெயர்ப்புப் பணியைச் செய்வது அவ்வளவு எளிதல்ல. நமது பக்கத்தில் உள்ள முகங்கள் உரையாடும் படைப்பு மொழியைப் பண்பாட்டு வேர்கள் சிதையாமல் உயிரோட்டம் பாதிக்காமல் ஒரு காட்டாற்று வெள்ளமான வாசிப்பனுவமாக இந்தப் பிரதியை மாற்றி இருப்பது மாரியப்பனின் மொழிபெயர்ப்பில் நடந்திருக்கிறது.
மாரியப்பன் மொழிபெயர்த்து நமக்குத் தந்துள்ள ‘அத்தங்கி மலை’ என்ற இந்த நூல் விளிம்பின் குரலை விரித்துக் காயப்போடுவதைக் காணலாம். அவரின் மொழிபெயர்ப்பில் பி.அஜய் ப்ரசாத்தின் பத்துக் கதைகளிலும் இந்தத் தனித்தன்மையை நாம் உணரலாம். காடு, மலை, பள்ளத்தாக்கு, அருவியென விரிந்த உள்வாங்கல் கூடிய ஒரு வாசிப்பனுபவம் அஜய் ப்ரசாத்திற்கு வாய்த்திருக்கிறது. அந்த உற்று நோக்கலின் வெளிப்பாடு மிகவும் அடர்த்தியான வாழ்வைக் கதைகளுக்குள் பதிவு செய்ய உதவி
இருக்கிறது எனலாம். உதிரி மனிதர்கள், மற்றமைகளின் மீதுள்ள கரிசனங்கள் எல்லாம் படைப்பாக்கி இருக்கும் தருணங்களை
நாம் படைப்பாளியின் தனித்துவ அடையாளமாகப் பார்க்க முடிகிறது. இப்படியான மற்றமைகளின் குரலைப் பேசுகிற கதைகளைத் தேர்வு செய்து தெலுங்கிலிருந்து நவீன தமிழுக்குத் தந்திருக்கும் மாரியப்பனின் பணியை நாம் தலை வணங்கி வரவேற்போம். மாரியப்பனின் தொடர்ந்த வாசிப்பும் செயல்பாடும் பார்க்கையில் எரிதழல் கொண்டு வரும் அக்னிக் குஞ்சாகக் கண்ணுக்குத் தெரிகிறார்.
