Skip to product information
1 of 1

Product Description

அத்தைக்கு மரணமில்லை | ATHTHAIKKU MARANAMILLAI

அத்தைக்கு மரணமில்லை | ATHTHAIKKU MARANAMILLAI

Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 125.00
Regular price Sale price Rs. 125.00
Sale Sold out
Shipping calculated at checkout.

Low stock

ATHTHAIKKU MARANAMILLAI - மூன்று பெண்கள், மூன்று தலைமுறைகள், மூன்று உலகங்களைக் கோர்த்துப் பின்னப்பட்ட கதை இது. பால்யத்தில் விதவையாக்கப்பட்ட அத்தையம்மாவுக்கு அவரிடமிருந்து பறிக்கப்பட்ட இளமைகாலக் கனவுகள், ஆசைகள் இவற்றின் இடத்தை அவர் வைத்துக்கொண்டிருக்கும் நகைகளின் மதிப்பு அளித்துள்ள அதிகாரம் ஈடுபடுத்துகிறது. மரணத்திற்குப் பிறகும் அவரது ஆசைகள் மடிவதில்லை; மணமாகி அக்குடும்பத்துக்குள் வரும் மருமகளிடம் நகைப்பெட்டியை ஒப்படைத்த பின்பும் நகைகள்மீது அவருக்கிருக்கும் பிடிப்பு போய்விடவில்லை. அவரது ஆவி அவளைக் கண்காணித்தபடியே இருக்கிறது. எளிய குடும்பத்திலிருந்து வரும் மருமகளுக்கு தனது துணையைத் தேர்வுசெய்யும் உரிமை இல்லை என்றாலும், தானும் தடுமாறிக்கொண்டிருக்கும் தனது குடும்பமும் செல்லவேண்டிய பாதையை முடிவுசெய்யும் துணிச்சலை நகைப்பெட்டி அளிக்கிறது. மூன்றாவது தலைமுறையினரான அவளது மகளுக்கு தனக்கான இலக்கையும் வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளும் சுதந்திரம் கிடைத்துவிடுகிறது. நகைப்பெட்டிக்கு அவளிடம் வேலையில்லை. அத்தையம்மாவின் ஆசைகள் இவள்மூலமாக நிறைவேறுகிறதா?

இயல்பான மொழியில் உயிரோட்டமான நடையில் ஒரு மர்மக்கதையின் விறுவிறுப்புடன் புனையப்பட்டிருக்கிறது இந்தக் குறுநாவல்.

View full details