Product Description
அதிசயம் அனேகமுற்ற பழநி | ATHISAYAM ANEHAMUTRA PALANI
அதிசயம் அனேகமுற்ற பழநி | ATHISAYAM ANEHAMUTRA PALANI
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
Low stock
பழநி எனும் பெயரைக் கேட்டதுமே விபூதி, பஞ்சாமிர்தம், மலையின் மலைக்க வைக்கும் அழகு, வேலாண்டியாக ஞான தண்டத்துடன் மேற்குத் திசை நோக்கிக் குடிகொண்டிருக்கும் பழநி ஆண்டவன், விநாயகருக்கும் முருகனுக்கும் இடையே நாரதர் நடத்தி வைத்த மாதுளங்கனித் திருவிளையாடல், நவபாஷாணத்தாலான ஒப்பற்ற முருகன் திருவுருவம் எல்லாம் நினைவுக்கு வரும். இங்கு அருள்பாலிக்கும் அழகன் முருகன் நிகழ்த்திய அற்புதங்கள், அவனை தரிசித்த அடியார்கள், புகழ்ந்து பாடிய புண்ணியர்கள் என அரிதான தகவல்களின் வழியே பழநிபதிவாழ் பாலகுமாரன் அருளை உங்கள் இல்லங்களுக்குக் கொண்டு சேர்க்கிறது இந்த நூல்!
ஆசாபாசங்களை அறுத்தெறிந்து ஆன்ம சுகம் பெற வெண்ணீறும், வெண் கோவணமும் போதும் என்ற எளிமை உணர்வை நாம் கைக்கொள்ள வழிகாட்டும் குரு அவன். அந்தப் பழநிவேலனையும் அவன் கொலுவிருக்கும் பழநி மலையையும், அங்கே முருக வேள்வி தொடங்கியதும், தொடர்வதுமான விஷயங்களை அருணகிரிநாதரின் பாடல்கள் வாயிலாக எளிமையாக இந்தப் புத்தகத்தில் விளக்குகிறார், ஆசிரியர் திருமதி சித்ரா மூர்த்தி.
இந்த பஞ்சாமிர்தத்தைச் சுவைத்துப் பாருங்கள், பழநி வேலவனையே சிந்தையால் சுவைத்து இன்புறுவீர்கள்.
.
