Product Description
ஆர்தேமியோ க்ரூஸ்சின் மரணம் | ARTEMIO CRUISIN MARANAM
ஆர்தேமியோ க்ரூஸ்சின் மரணம் | ARTEMIO CRUISIN MARANAM
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
Low stock
நாவலின் தொடக்கத்தில், ஆர்தேமியோ க்ரூஸ் - ஓர் எல்லாம்வல்ல செய்தித்தாள் நிறுவனர் மற்றும் நிலப்பிரபு, மோசமாக நோயுற்ற நிலையில் படுக்கையில் கிடக்கிறார். கனவு போன்ற தெறிப்புகளில் அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டங்களை நினைவுகூர்கிறார். கார்லோஸ் புயந்தஸ் இந்தக் கலைடாஸ்கோப்பின் தொடர்காட்சிகளை திகைப்பூட்டும் விதத்தில் புதுமையான வகையில் கையாள்கிறார். ஒரு நினைவின்மீது மற்றொரு நினைவை அடுக்குகிறார், தொடக்ககாலத்தில் மெக்சிகோ புரட்சியின்போது க்ரூஸ்சின் நாயகத்தன்மை வாய்ந்த ராணுவ நடவடிக்கைகள், போருக்குப்பின் இரக்கமற்ற, நேர்மையற்ற முறையில் ஏழ்மையிலிருந்து செல்வத்தின் உச்சியில் பண்ணைவீட்டின் முதலாளியாக உயர்வது, தற்போது உடல்நலமில்லாத முதியவராக தனது நீண்ட, பல்வேறு வன்முறைகள் நிறைந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பது என. உண்மையில் இது கார்லோஸ் புயந்தஸ்சின் ஆகச்சிறந்த படைப்பு, ‘ஆர்தேமியோ க்ரூஸ்சின் மரணம்’ இன்றைய மெக்சிகோவுக்குள் நிகழும் ஓர் உயிரோட்டமுள்ள பயணம்.
“மிகுந்த கற்பனையாற்றலும் மிகுந்த திறனும் கொண்ட நாவல். ஒரு மனிதனின் வாழ்க்கை மூலமாக நவீன மெக்சிகோவின் வரலாற்றைக் கூறிச்செல்கிறது... இந்தப் புத்தகத்தின் அமைப்புநயம், கட்டமைவு, மனோவியல் மற்றும் விவரிப்பின் வளமையைக் கண்டு திகைப்படைந்தேன்.”
