Product Description
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்! | ANTHA MARATHAIYUM MARANDHEN MARANDHEN NAAN
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்! | ANTHA MARATHAIYUM MARANDHEN MARANDHEN NAAN
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
Low stock
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்’ நாவலைப் படித்து முடித்துப் புத்தகத்தைக் கீழே வைத்த போது இந்தக் கதாசிரியையின் மற்ற படைப்புகளை மீண்டும் படிக்க வேண்டும் என்ற உள் தூண்டுதல் எனக்குள் ஏற்பட்டது. ஒரு கதையின் வாசிப்பு அப்படி ஒரு விருப்பத்தை நம்மிடம் உண்டு பண்ணும் போது, அந்தக் கதைப் படைப்பாளியின் மற்ற படைப்புகளை நோக்கித் திரும்பிச் செல்லத் தூண்டும்போது அது எதனைக் காட்டுகிறது? அந்தப் படைப்பாளி நம்மை வென்று விட்டார் என்பதைத் தான். ஒரு சிறந்த இலக்கியப் படைப்பின் முக்கிய நோக்கம், வாசகர்களை ரசிக்கும்படி செய்வதோ, அவர்களுக்கு அழகியல் அனுபவத்தைப் பகிர்ந்து கொடுப்பதோ மட்டுமல்ல – ஒரு நல்ல படைப்பு வாசகர்களுக்குக் காயத்தை ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு வெட்கத்தை உண்டாக்க வேண்டும். அவர்களை வேதனைப்படுத்த வேண்டும். அவர்களின் உறக்கத்தைக் கெடுக்க வேண்டும். இந்த நாவல் அந்த அறத்தை அழகாகச் செயல்படுத்துகிறது. - எம். முகுந்தன்
