ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உறவு பல காலமாக நின்று நிதானித்து உருவாக்கப்பட்ட மிக நுணுக்கமான அத்துமீறல்களையும், வன்முறைகளையும் உள்ளடக்கியது.
ஆண்-பெண் உறவு என்னும் விசித்திர மிருகத்தின் அன்றாடப் போக்கினைச் சொல்வதற்கான ஒரு முயற்சி இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள்.
நகரம் என்னும் பெரும் கானகத்தின் நீர்நிலைகளின் ஓரங்களில் எல்லாம் இந்த மிருகத்தின் கால்தடங்கள் விசேஷமாய் ஜ்வலிக்கின்றன.