Skip to product information
1 of 1

Product Description

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் | YETRAM THARUM YETRUMATHI THOZHILGAL

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் | YETRAM THARUM YETRUMATHI THOZHILGAL

Publisher - ANANDA VIKADAN

Language - TAMIL

Regular price Rs. 150.00
Regular price Sale price Rs. 150.00
Sale Sold out
Shipping calculated at checkout.

In stock

இன்றைய தினம் வளம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளது ஏற்றுமதி தொழில். ஆனால், ஏற்றுமதி தொழில் பற்றிய புரிதல் இல்லாததால் பலர் இந்தத் தொழிலில் இறங்க பயப்படுகின்றனர் என்பதே உண்மை. இந்தக் குறையை நீக்கவே இந்த நூல்.
ஏற்றுமதி செய்வது என்பது பெரும் சிக்கலா? எல்லோராலும் ஏற்றுமதி வியாபாரம் செய்ய முடியாதா? ஏற்றுமதி தொழில் லாபம் தரக்கூடியதா? சுலபம். மிக மிகச் சுலபம் என்கிறார் நூலாசிரியர்.
மேலைநாடுகளில் இந்திய உணவுப் பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை முக்கியமாக, மூன்று மாநிலங்கள் ஏற்றுமதியில் சிறந்து விளங்குகின்றன. இதில் முதல் இடத்தில் இருப்பது, குஜராத், இரண்டாவது இடத்தில் மஹாராஷ்டிரா, இதற்கு அடுத்து தமிழகம்.
உணவுப் பொருட்கள், பொறியியல் சார்ந்த பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், ஆடைகள் நறுமணப் பொருட்கள் ஆகியவற்றில் அதிகமான ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன.
இந்த ஏற்றுமதி தொழிலை எப்படிச் செய்யலாம்? முதன்முதலாக ஏற்றுமதி தொழிலில் இறங்குகிறவர்கள், இந்தியாவுக்குப் பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு நாட்டுக்கு, அங்கு அதிக தேவை உள்ள ஒரு பொருளைத் தேர்வு செய்து அனுப்பலாம். சின்னச் சின்ன ஆர்டர்கள் எடுத்து அனுப்பி, நன்கு அனுபவப்பட்ட பின் பெரிய ஆர்டராக எடுத்தால் இந்தத் தொழிலில் நீண்ட காலத்துக்கு நிலைக்க முடியும்.
இதுபோன்ற ஏற்றுமதி நுணுக்கங்கள் இந்த நூலில் உங்களுக்காக காத்திருக்கின்றன. ஏற்றுமதி குறித்த சந்தேகங்கள், தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு என்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்யலாம், அதுதொடர்பாக கவனிக்க வேண்டிய அம்சங்கள், வழிமுறைகளை வாரி வழங்கியிருக்கிறார் நூலாசிரியர்.
நீங்கள் சிறந்த ஏற்றுமதியாளராக உருவாக... இந்த நூல் நிச்சயம் வழிகாட்டும்.

View full details