Product Description
தத்தகாரம் | THATTHAKAARAM
தத்தகாரம் | THATTHAKAARAM
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
Low stock
திரையிசையின் நீளமும் ஆழமும் உணர்ந்து எழுதிவரும் மிகச்சில பாடலாசிரியர்களில் யுகபாரதி குறிப்பிடத்தக்கவர். தமிழ்த்திரையிசை குறித்து, தொடர்ந்து அவர் எழுதிவரும் கட்டுரைகள், வாசகப்பரப்பில் பெரும் கவனத்தை ஈர்த்துவருகின்றன.
இசையின் நுட்பங்களை விவரிப்பவர்கள் நிறைய உண்டு. ஆனால், யுகபாரதியோ திரைப்பாடலுக்குள் விரவிவரும் வார்த்தைகளையும் சந்த அமைப்புகளையும் கவனிக்க வைக்கிறார். பாடல்களின் வழியே அவர் தெரிவிக்கும் குறிப்புகள், திரைப்பாடல் ரசிகனுக்கு புதுவிதமான அனுபவங்களை வழங்குகின்றன.
இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் தமிழ்த் திரையிசையை உணர்ந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன. தமிழ்ச் சமூகத்தின் தொன்மையான இசைமரபே திரைப்பாடல்களின் நீட்சி என இக்கட்டுரைகளில் நிறுவியிருக்கிறார். இந்நூலை வாசித்த பிறகு திரைப்பாடல்களைக் கேட்போமானால், இதுவரையில்லாத உணர்வுகள் முகிழ்க்கக்கூடும். யுகபாரதி சொல்லும் திரைப்பாடல்களின் பின்னணித் தகவல்கள் பிரமிக்க வைக்கின்றன
