Skip to product information
1 of 1

Product Description

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் | SRIMATH PAMPAN SWAMIGAL

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் | SRIMATH PAMPAN SWAMIGAL

Language - TAMIL

Regular price Rs. 140.00
Regular price Sale price Rs. 140.00
Sale Sold out

Out of stock

சமையல் என்ற கலையைத் தற்செயலாகக் கற்ற பிறகே மனிதன் நாகரிகத்தை நோக்கிய பயணத்தில் முதல் அடியை எடுத்து வைத்தான். சமையலில் பக்குவம் பெற்று, எந்த ஒரு உணவும் தனி ருசியை அடைகிறது. உணவைச் சமையல் பக்குவப்படுத்துவது போலப் பக்தியைப் பக்குவப்படுத்த வந்தவர்கள் மகான்கள். இறைவனை மனிதன் அடையும் பாதையைப் பக்குவப்படுத்தித் தந்தார்கள் இவர்கள். ஆன்மிக அதிர்வு நிரம்பியிருக்கும் தமிழகத்தில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை சரித்திரமே இந்த நூல்.  முருக வழிபாட்டில் தமிழகத்துக்குப் பெரும் பாரம்பரியம் உண்டு. தமிழர்களின் ஆதி கடவுளாகக் கருதப்படும் முருகன் காட்டிய வழியில் பயணித்து, முருகனையே மூச்சாகக் கருதி வாழ்ந்தவர் பாம்பன் சுவாமிகள். ஒரு பக்தி இயக்கமாகவே திகழ்ந்த அவர், எத்தனையோ அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளார்.

மிகவும் நுணுக்கமான பக்தி இலக்கியங்கள் பலவும் படைத்திருக்கிறார். இவை அத்தனையும் வாழ்வுக்கு வழிகாட்டியாக விளங்குவது, நமக்குக் கிடைத்த பெரும்பேறு. நோய்கள் தீர்க்கும் பாடல்கள், துன்பம் போக்கும் பாடல்கள் எனப் பயனுள்ள அனைத்தையும் ஒன்றுவிடாமல் தொகுத்துத் தந்திருக்கிறார், நூலாசிரியர் எஸ்.ஆர்.செந்தில்குமார். ‘குங்குமம்’ இதழில் தொடராக வெளிவந்தபோதே லட்சக்கணக்கான வாசகர்களின் பாராட்டைப் பெற்ற இந்தச் சரித்திரம், பிறகு நூலாக வெளிவந்தது. பாம்பன் சுவாமிகளின் வழிகாட்டிப் பாடல்கள் அனைத்தும் இந்த நூலின் பின் இணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன. 28 அத்தியாயங்களைக் கொண்ட இந்நூலை உங்களின் நியாயமான கோரிக்கையோடு தினமும் ஒரு அத்தியாயம் வீதம் பாராயணம் செய்து வர, உங்கள் எண்ணம் நிச்சயம் நிறைவேறும். ராமதூதன் அனுமனிடம் வேண்டுதல் சொல்ல ‘சுந்தரகாண்டம்‘ உதவுவது போல, முருகனிடம் உங்களின் கோரிக்கையைக் கொண்டு செல்லும் பிரார்த்தனை நூலாக இது மிளிரும். பக்தி மழையில் நனையுங்கள்; படித்துப் பயன் பெறுங்கள்!.
View full details