1
/
of
1
Product Description
சொல் தீண்டிப் பழகு | SOL THEENDI PAZHAGU
சொல் தீண்டிப் பழகு | SOL THEENDI PAZHAGU
Author - CHAARU NIVEDHITHA
Publisher - EZHUTHU PRASURAM
Language - TAMIL
Regular price
Rs. 230.00
Regular price
Sale price
Rs. 230.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
Share
Low stock
1973-ஆம் ஆண்டு சீலேயின் தலைநகர் சாந்த்தியாகோவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் டாக்டர் சால்வதோர் அயெந்தே (Dr. Salvador Allende) அவரது ராணுவத் தளபதி பினோசெத் செய்த தந்திரமான ராணுவப் புரட்சியின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார். பிறகு பினோசெத் ஆட்சிக்கு வந்தவுடன் ஆயிரக்கணக்கான பேரை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லி சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார். அப்படிக் கொல்லப்பட்டவர்களில் முக்கியமான ஒருவர் விக்தர் ஹாரா (Victor Jara) என்ற பிரபலமான பாடகர். நம் நாட்டில்தான் இசை என்பது வெறும் கேளிக்கையாக இருக்கிறது. ஆனால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இசைக் கலைஞர்கள் போராட்ட வீரர்களாக இருந்திருக்கிறார்கள்.
View full details
இசைக் கலைஞர்கள் மட்டும் அல்ல; பாதிரியார்களும் கூட விடுதலை வீரர்களாக இருந்தார்கள். விடுதலை இறையியல் (Liberation Theology) என்ற புதியதொரு கோட்பாடே லத்தீன் அமெரிக்காவிலிருந்துதான் உருவானது. சில நூற்றாண்டுகளுக்கு முன் தென்னமெரிக்க நாடுகளுக்குச் சென்று அங்கிருந்த ஆதிகுடிகளை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்து அவர்களின் சொந்த மொழியையும், கடவுளையும், கலாச்சாரத்தையும் ஒழித்துக் கட்டிவிட்டு தங்கள் மதத்தையும் மொழியையும் திணித்த போர்த்துக்கீசிய, ஸ்பானிய மத போதகர்கள் 1970களில் லத்தீன் அமெரிக்க நாடுகளின் சர்வாதிகாரிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுபவர்களாக மாறினார்கள். அதுதான் விடுதலை இறையியல். கிறித்தவமும் மார்க்சீயமும் இணைந்த அரசியல் தத்துவம்.
நூலிலிருந்து...
