Product Description
சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள் | SINTHANAIYAI ORUMUGAPADUTHI SELVATHAI KUVIYUNGAL
சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள் | SINTHANAIYAI ORUMUGAPADUTHI SELVATHAI KUVIYUNGAL
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
In stock
1937 ஆம் ஆண்டில் வெளிவந்த, இம்மொழியாக்கத்தின் மூலநூல், இதுவரை எழுதப்பட்டுள்ள தலைசிறந்த சுயமுன்னேற்ற நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஏழு கோடிப் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ள இந்நூல், எண்ணற்றோரின் வாழ்க்கையை அடியோடு மாற்றியுள்ளது. சுயமாகக் கோடீஸ்வரர்களாக ஆனவர்கள் மற்றும் தொழிலதிபர்களில் பெரும்பாலானோர், தங்களுடைய வெற்றிக்கான மூலகாரணமாக இந்நூலைத்தான் குறிப்பிட்டுள்ளனர்.
தன்னிகரற்ற இந்நூலில், செல்வச்செழிப்பிற்கு இட்டுச் செல்கின்ற, எளிய, ஆனால் சக்தி வாய்ந்த 13 கொள்கைகளை நெப்போலியன் ஹில் முன்வைக்கிறார். அவை பின்பற்றப்படும் பட்சத்தில், எவரொருவரும் செல்வந்தராவதற்கும் தங்களுடைய அனைத்து இலக்குகளையும் அடைவதற்கும் இந்தப் பொன்னான விதிகள் உதவும். செல்வத்தைக் குவிப்பதற்கான மாயாஜாலமான வழிமுறைகள் எதுவும் இதில் இடம் பெறவில்லை. மாறாக, செல்வத்தைக் குவிப்பதிலிருந்து நம்மைத் தடுக்கின்ற உளவியல்ரீதியான முட்டுக்கட்டைகளைத் தகர்த்தெறிவதன்மீது மட்டுமே இந்நூல் கவனம் செலுத்துகிறது.
அமெரிக்க எஃகு உலகின் முடிசூடா மன்னராக விளங்கிய, பெரும் செல்வந்தர்களில் ஒருவரான ஆன்ட்ரூ கார்னகியின் கோரிக்கைக்கு இணங்கி, மாபெரும் வெற்றியாளர்கள் 500 பேர் உட்பட, வாழ்வின் பல்வேறு தளங்களைச் சேர்ந்த 25,000க்கும் அதிகமான மக்களைப் பேட்டி காண்பதில் ஹில் தன் வாழ்வின் 25 ஆண்டுகளைச் செலவிட்டார். அதன் ஊடாகத் தான் சேகரித்த அறிவை, ‘வெற்றி விதி’ என்ற தன்னுடைய தத்துவமாக அவர் உருமாற்றினார். விலை மதிப்பிடப்பட முடியாத அந்தத் தத்துவம் இப்புத்தகத்தில் தெளிவாகவும் தாக்கம் ஏற்படுத்தும் விதத்திலும் விளக்கப்பட்டுள்ளது.
