Skip to product information
1 of 1

Product Description

சாலப்பரிந்து | SAALAPARINTHU

சாலப்பரிந்து | SAALAPARINTHU

Publisher - KALACHUVADU

Language - TAMIL

Regular price Rs. 290.00
Regular price Sale price Rs. 290.00
Sale Sold out
Shipping calculated at checkout.

Low stock

நாஞ்சில்நாடனின் கதை என்பது கண்ணால் கண்ட காட்சியையோ காதால் கேட்ட செய்தியையோ மனதால் விரித்துகொண்ட கற்பனையையோ மாத்திரம் நம்பி எழுதப்பட்ட புனைவு அல்ல. மாறாக அவருடைய கதைகளின் சாராம்சத்தில் உள்ளுறைந்திருப்பது தொன்மையான ஒரு நிலமும், அதன் மொழியும் அவற்றின் தொகை விரிவான பண்பாட்டு செழுமையும் ஆகும். பின்னைப் புதுமையை தாவிப் பற்றும் நாட்டத்தால் உயிர்ப்பான மரபினின்றும் தன் வேர்களை துண்டித்துக் கொண்டு விடாத தன்மையால், காருண்யத்தை நீதியுணர்வை விழுமியங்களை வற்புறுத்தும் வகைமையால் தனித்து நிற்பவை இவரது கதைகள். நாஞ்சிலின் நாற்பது வருடத்துக்கு மேலான எழுத்து வாழ்வின் தடத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இத் தொகுப்பில் அவருடைய ஆகச் சிறந்த கதைகள் இடம்பெற்றுள்ளன. Selected short stories of Nanjil Naadan. Nanjil nadan is a Award winning writer in Tamil.
View full details