Product Description
ரத்தம் கொதிக்கும் போது | RATHAM KOTHIKKUM POTHU
ரத்தம் கொதிக்கும் போது | RATHAM KOTHIKKUM POTHU
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
Low stock
மார்க்ஸியச் சிந்தனையாளரும், எழுத்தாளருமான எஸ்.வி.ராஜதுரை, மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தமிழக – இந்திய -உலக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். முக்கியமான மேற்கு நாட்டுத் தத்துவவாதிகளின் சிந்தனைகளை தமிழுலகிற்கு அறிமுகம் செய்துள்ள எஸ்.வி.ஆர்.,கலை இலக்கியம் தொடர்பான ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். கூடஞு இணிட்ட்தணடிண்t Mச்ணடிஞூஞுண்tணி என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில், இந்தியாவில் வேறு ஏந்த மொழியிலும் இல்லாத வகையில் விரிவான விளக்கக் குறிப்புகளுடன் தமிழாக்கம் செய்திருக்கிறார்.
அவரது அண்மைக் கால நூல்கள் : ‘சொல்லில் நனையும் காலம்’, தீவுச்சிறையில் விடுதலை இலக்கியம்’ ‘ரஷியப் புரட்சி: இலக்கிய சாட்சியம், ‘ஸரமாகோ: நாவல்களின் பயணம்’. தனியாகவும் பெண்ணியச் சிந்தனையாளர் வ.கீதாவுடன் இணைந்தும் அயல்மொழிச் சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றிய அவர், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்திருக்கிறார்.
