Product Description
புலப்படாத நகரங்கள் | PULAPADATHA NAGARANGAL
புலப்படாத நகரங்கள் | PULAPADATHA NAGARANGAL
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
Low stock
மார்க்கோபோலோ (1254-1324) கான்ஸ்டாண்டிநோபிளிலிருந்து, “கேதே“ என முன்பழைக்கப்பட்ட மேற்குசீனத்திற்குப் பயணம் செல்லும் வழியில், பாரசீகத்தில் கேள்விப்படும் கதை இது. இது போன்று கேள்விப்படும் விஷயங்களையும் நேரிடையான அனுபவங்களையும் வைத்து மார்கோபோலோ எழுதியது “The Travels".
சமவெளிகள் , பள்ளத்தாக்குகள் , பீடபூமிகள் , பாலைகள் என்று பயணம் செய்து குப்ளாய்கானின் பேரரசை அடைகின்ற போலோ, கடல் வழியாக திரும்புகின்றார்.13 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தந்தை நிக்கோலோ போலோவுடனும் பெரியப்பா மேஃபே போலோவுடனும் இப்பயணத்தை மேற்கொண்டார். உலகு தோன்றியநாள்தொட்டு உலகின் குறுக்காகவும், நெடுக்காகவும், அந்தஅளவுக்கு யாரும் பயணித்ததில்லை. பின் வந்த கொலம்பஸ் இபின்பதூதா போன்றோர்க்கெல்லாம் போலோவின் நூல் வேதாகமமாய் இருந்திருக்கிறது.
இத்தாலியின் பத்திரிகையாளரும் நாவலாசிரியருமான இடாலோ கால்வினோ புதுவகையான கதை சொல்லலும் விவரிப்பும் சேர்த்து அற்புதமான நாவலாக “புலப்படாத நகரங்களை” எழுதியிருக்கிறார். விதவிதமான நகரங்களுக்குப்போய் வந்து தன் அனுபவத்தை போலோ குப்ளாய்கானிடம் விவரிப்பதும் அதனைக் கேட்டுவிட்டு மன்னர் கேள்விகள் கேட்பதுமாக நாவலை உருவாக்கியிருக்கிறார்.
