Product Description
பைப்லைனில் பணம் ।PIPELINIL PANAM
பைப்லைனில் பணம் ।PIPELINIL PANAM
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
In stock
நாம் மிகச் செழிப்பான ஒரு பொருளாதாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனாலும், கோடிக்கணக்கான மக்கள் இன்னும் மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றனர், செலவுகளை ஈடுகட்டுவதற்காக மேன்மேலும் அதிக நேரம் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். ஏன்? ஏனெனில், அவர்கள் ஒரு தவறான திட்டத்தைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர். ‘பணத்திற்காக நேரத்தைப் பண்டமாற்று செய்தல்’ என்ற பொறிக்குள் அவர்கள் சிக்கியுள்ளனர்.
பணத்திற்காக நேரத்தைப் பண்டமாற்று செய்தல் என்ற பொறியிலிருந்து எவ்வாறு தப்பிப்பது? தொடர்ச்சியாகவும் நிரந்தரமாகவும் பணத்தைக் கொட்டிக் கொண்டே இருக்கின்ற பைப்லைன்களை உருவாக்குவதன் மூலமாகத்தான்! பைப்லைனை உருவாக்கும் வேலையை நீங்கள் ஒருமுறை செய்கிறீர்கள், ஆனால் மீண்டும் மீண்டும் உங்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதனால்தான் ஒரே ஒரு பைப்லைன் ஓராயிரம் சம்பளக் காசோலைகளுக்கு சமம் என்று நான் கூறுகிறேன். பைப்லைன்கள் அடுத்தடுத்து ஒவ்வொரு நாளும், ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து பணத்தைக் கொட்டிக் கொண்டே இருக்கின்றன - வேலை செய்வதற்கு நீங்கள் அங்கு இருந்தாலும் சரி அல்லது இல்லாவிட்டாலும் சரி..
வெறுமனே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்ற நிலையில் இருந்து விடுபட்டு, ஓர் அற்புதமான வாழ்க்கையை அனுபவிக்கின்ற நிலைக்கு உயருவதற்குப் பைப்லைன்களை உருவாக்குவது எப்படி என்பதைப் ‘பைப்லைனில் பணம்’ எனும் இந்நூல் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்.
- பர்க் ஹெட்ஜஸ்
