Product Description
பள்ளிகூடம் | PALLIKOODAM
பள்ளிகூடம் | PALLIKOODAM
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
Low stock
வெளியில் அடர்த்தியாய் பெய்யும்பனி – வீட்டினுள் நடுக்கம் கொள்ள வைப்பது போல், கல்விப் புலத்தைச் சுற்றிச் சூழும் சாதியக் கசடு, கூடங்களுள்ளும் இறங்குகிறது. வேர் முதல் நுனிவரை விசம்பாய்ச்சி கல்விக்கூடங்களை நீலம் பாரித்துப் போகச் செய்துள்ளது. உடலின் ஒரு பாகத்தில் ஊறல் ஆரம்பித்தால் மளமளவென உடல் முழுதும் ஏறி சொறியச் சொறியச் சுகமாகிறது. சொறியும் சுகத்தை அரசியல்சக்திகள் சிரத்தையாய் ஏற்று உலவுகின்றன. காதல் என்னும் பாலினப் பிரியத் தடுப்பு, நட்புக்கு அளவு, உறவுக்கு எல்லை, சமுதாய இணக்கத்துக்குச் சுவர், மனிதகுணவாகு சிதைப்பு – என சொறியும் சுகத்தை நீட்டித்துக் கொண்டே போகின்றன.
கல்வி, பால்யம் தொலைத்தல், வேலை வாய்ப்பு, சம்பாத்தியம், வெளிநாட்டில் தங்கிவிடுதல், பணம் பண்ணும் இயந்திரமாகுதல் என்று எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்தி தன் முதல் நாவலில் விடை காண்கிறார் பா.செயப்பிரகாசம்
