Skip to product information
1 of 1

Product Description

பலன் தரும் ஸ்லோகங்கள் | PALAN THARUM SLOGANGAL

பலன் தரும் ஸ்லோகங்கள் | PALAN THARUM SLOGANGAL

Language - TAMIL

Regular price Rs. 150.00
Regular price Sale price Rs. 150.00
Sale Sold out
Shipping calculated at checkout.

Out of stock

‘மந்திரத் தன்மை இல்லாத எழுத்து என எதுவும் இல்லை. மருத்துவத் தன்மை இல்லாத வேர் என எதுவும் இல்லை. உபயோகம் இல்லாத மனிதன் என்று எவரும் இல்லை. இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கத் தெரிந்தவர்கள்தான் இங்கே இல்லை’ என்கிறது ஒரு சமஸ்கிருத ஸ்லோகம். தனது பசியை, அழுகையின்மூலம் ஒரு குழந்தை தன் தாய்க்கு உணர்த்துகிறது. அந்த அழுகையைப் புரிந்துகொள்ளும் தாய், குழந்தைக்கு பாலூட்டி அழுகையை சிரிப்பாக்குகிறாள். அதுபோல மனிதர்கள் தங்கள் தேவைகளை கடவுளிடம் அறிவிக்க பிரார்த்தனை, விரதம், காணிக்கை என பல வழிகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான், மந்திரங்கள் வாயிலாக கடவுளை தம் பக்கம் திரும்பச் செய்வது. ‘என்னைக் கொஞ்சம் கவனியேன்’ என இறைஞ்சுவது.

நோய் தீர, குழந்தைப் பேறு கிடைக்க, திருமணம் இனிதாக அமைய, செல்வச் செழுமை பெற... இப்படி ஒவ்வொரு தேவையையும் நிறைவேற்றித் தரும் இனிய ஸ்லோகங்கள் பலவற்றை நம் முன்னோர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவற்றை எப்போது, எப்படி உச்சரித்து வேண்டினால் பலன் கிடைக்கும்? அதற்கான வழிகாட்டியாக இருக்கிறது இந்நூல். ‘தினகரன் ஆன்மிக மலர்’ இதழில் பலன் தரும் ஸ்லோகமாக வாரந்தோறும் வெளியாகி லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு பயன் தந்த பகுதி, தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியாகியுள்ளது.உங்கள் வீட்டு பூஜையறையில் அமர்ந்து, அருள்மருந்தாக இந்நூல் உங்கள் வாழ்வை மலரச் செய்யும் என்பது நிச்சயம்!
View full details